1. கோட்பாட்டின் வளர்ச்சி
பொதுவுடைமை என்பது இன்று ஒரு குறிக்கோள் மட்டுமன்று. அது ஒரு முறை.
பொதுவுடைமையின் குறிக்கோளாவது: பொருளை உண்டுபண்ணும் கருவிகள், அதை மக்களிடையே பரிமாற்றம் செய்யும் உரிமை ஆகிய வற்றைச் சமூகப் பொதுவுடைமை ஆக்கி, அதன் மூலம் வகுப்பு வேறு பாடற்ற சமூகத்தை நிறுவுவதே. அதை நிறைவேற்றும் வகை துறையாவது; சமூகப் புரட்சியை உருவாக்கி உழைப்பு வகுப்பின் வல்லாட்சியை உண்டு பண்ணுவதே.
குறிக்கோள் புதிதல்ல.
பொதுவுடைமையின் பிளேட்டோவின் 'குடியரசு' என்ற நூலில் அதன் அடிப்படைக் கனவார்வத்தைக் காணலாம். 5-முதல் 15ஆம் நூற்றாண்டு வரையுள்ள இடையிருட் காலத்தில் கிறிஸ்துவ மதவாதிகள் கூட, கிறிஸ்துவ மதத்தின் தொடக்கக் காலத்தை மக்கள் சரிசமத்துவம் நிலவிய பொற்காலமாகக் கற்பனை செய்திருந்தனர். 'கடவுள் ஒரே தந்தை; மக்கள் அனைவரும் ஒரே உடன் பிறப்பாளர்' என்ற சமத்துவக் கொள்கையைத் தீவிரமாகப் பரப்பியதனாலேயே, ஆங்கில நாட்டில் விக்ளிஃவ்வின் கூட்டத்தார் மட்டந்தட்டிகள், (LeVellers) உளறுவாயர் (Babbless) என்று அழைக்கப்பட்டதுடன், தீக்கும், இரையாக்கப்பட்டனர்.
சமயச் சீர்த்திருத்தமும் மறுமலர்ச்சி இயக்கமும் நிலவிய 15ஆம் நூற்றாண்டிலும், புலவரான ஸர் தாமஸ் மோர் பிளேட்டோவைப் பின்பற்றி ஒரு பொதுவுடமை உலகைக் கற்பனை செய்து தீட்டினார். கிராம்வெல் காலத்திலிருந்த கெரார்டு வின்ஸ்டான்லி கூட்டுறவு முறை உற்பத்தி, செலாவணி முறை ஒழிப்பு, எல்லாருக்கும் சரிசம உழைப்பை வலியுறுத்தும்