பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

|-

அப்பாத்துரையம் - 45

ஆயினும் தொழிற் புரட்சியால் ஏற்பட்ட புதிய சூழ்நிலையின் காரணமாக, தொழிற் சங்கங்களின் தேசக்கூட்டுறவு, பொது வேலை நிறுத்த நடைமுறைகள் ஆகியவை வளர்ந்தன. அத்துடன் 1848இல் இங்கிலாந்தில் ஆண் பெண்கள் அனைவர் மொழியுரிமை, மறைமொழிச் சீட்டு ஆகிய காலந்தாண்டிய முனைத்த கருத்துகளைக் கொண்ட பத்திர இயக்கமும் (Chartist Movement) பிரான்சில் இரண்டாவது புரட்சியும் ஏற்பட்டன.

பொதுவுடைமை வேதாந்தத்தை ஒரு பொதுவுடைமைக் கட்சியாகவும் ஓர் உலகத் தொழிலாளர் இயக்கமாகவும் மாற்ற உதவிய சக்திகளுள், தொழிற் புரட்சிக்கு அடுத்த முக்கியத்துவம் உடைய சக்தி கார்ல் மார்க்ஸ் என்ற ஒரு தனிமனிதன் முயற்சியே! அவருக்கு முன் பொதுவுடைமை ஒரு கருத்துக் குளறுபடிய யா யிருந்தது. பல வகுப்பு நலங்களை நாடிய பல அறிஞர்களும் இதுவரை குறிக்கோள் அளவிலேயே அதில் ஊடாடினார். கார்ல் மார்க்ஸ் குறிக்கோளொற்றுமையை மட்டுமன்றிக் கருத் தொற்றுமையையும் உண்டு பண்ணினார். அதுமட்டுமன்று. கருத்துத் துறையில் இறங்கி வழிமுறைகளும் திட்டமும் நோக்கி முனைந்தவரும் அவரே. சமய வேதாந்தப் போக்கு ஒழுக்கமுறைப் போக்கு, ஆகியவற்றை விட்டு அவர் அதை ஒரு பொருளிய, சமூக, அரசியல் முறை ஆக்கினார்.

மார்க்சின் கோட்பாடு கூறுகூறாகப் பிரிக்கத் தக்கதன்று; அது ஒரு முழுநிறை கோட்பாடு ஆயினும் அதை உணரும் வகையில் நாம் அதில் நான்கு கூறுகளைக் காணலம். ஒன்று வரலாற்றுக்கு அவர் தந்த புது விளக்கம், இரண்டாவது அவர் பொருளியல் வகுப்புப் போராட்டக் கோட்பாடு. மூன்றாவது அவர் வகுத்த வகை முறையாகிய புரட்சிப் பிரச்சாரம். நான்காவது அவருடைய பொருளியல் தத்துவங்கள். அவர் தோற்றுவித்த இயக்கத்துக்கு வகுப்புப் போராட்டக் கோட்பாடும் புரட்சிப் பிராச்சாரமுமே முதுகெலும்பு போன்றவை ஆகும். வரலாற்றாராய்ச்சியும் பொருளியலும் இவ்விரண்டுக்கும் வலுத் தர உதவின. அவை அவர் கோட்பாட்டுக்கு ஒரு புதிய சமயத்தின் ஆர்வத்தையும் வரலாறு, அறிவுநூல் ஆகியவற்றின் உறுதியையும் ஒருங்கே அளித்தன.