பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஹெரால்டு லாஸ்கியின் பொது உடைமை

87

உலகத் தொழிலாளர் இயக்கத்துக்கு மார்க்ஸ் அளித்த ஊக்கமும் உந்துவிசையும் மிகப் பெரியது. 1866இல் ஜெனிவாவில் கூடிய உலகத் தொழிலாளர் கூட்டுறவுப் பேரவை (First International) பல தொழிற் சங்கத் தலைவர்கள், மிதவாதச் சீர்திருத்த வாதிகள் முயற்சியாலேயே கூடிற்று. இதில் தனித்தனி தன்னுரிமை உடைய தொழிற்சங்கங்களின் கூட்டுறவையே நாடிய தலைவர் பக்குனின் என்பவர். அவர் அரசியலற்ற நிலையையே (அராஜக நிலையையே) குறியாகக் கொண்டார்.ஆனால்மார்க்சு அரசியலைக் கைப்பற்றும் புரட்சிக் கொள்கையை வலியுறுத்தினார். இவ்வேறுபாட்டால் அது படிப்படியாக வலுவிழந்தது.

இரண்டாவது உலகத் தொழிலாளர் கூட்டவை கூடுமுன் 1871இல் தீவிரக்கட்சி பிரான்சில் பாரிசு பொதுமைக்குழு (பாரிஸ் கம்யூன்) அமைத்து வேலை செய்தது. இது தோல்வியுற்றது.புரட்சி எதிர்ப்பாளர் ஆட்சியால் மார்க்ஸ் பிரான்சையும்

செர்மனியையும் விட்டு, பிரிட்டனிலேயே நாட்கழிக்க வேண்டியதாயிற்று. ஆனால் பிரிட்டனில் அவர் வறுமை யிடையே செய்த வேலை பொதுவுடைமைக்கு அறிவுத் துறையிலும் செயல் துறையிலும் இரும்புக் கோட்டையை எழுப்ப உதவிற்று.

பாரிசு பொதுமைக்குழுவின் தோல்வி மார்க்சீயத்துக்கு உண்மையில் வலுத் தந்தது. பொதுவுடைமை ஆட்சி அமைக்க அரசியலைக் கைப்பற்றுவதும் அரசியல் மன்ற முறைகளும் போதா என்பதையும், படைத்துறையையும் கைப்பற்றிப் பணித்துறை வகுப்பையும் மாற்றியமைப்பதுடன், தொழிலாளர் வகுப்பின் சார்பில் வல்லாட்சி நிறுவுவது அவசியம் என்பதை அது காட்டிற்று.

1871க்கும் 1915க்கும் இடைப்பட்ட காலத்தில் மிதவாதச் சீர்த் திருத்தமே மேலோங்கிற்று.1889இல் கூடிய இரண்டாவது உலகத் தொழிலாளர் கூட்டமைப்பு பெயரளவிலேயே சமதரும மார்க்சீயப் பதங்களை மேற்கொண்டது. ஆயினும் தீவிரக் கட்சியொன்று வளர்ந்து கொண்டேதான் வந்தது. மிதவாதக் கட்சிகளுக்கு செர்மனியின் பெரும் பான்மைக் கட்சியான தேசிய சமதரும(நாஜி)க் கட்சியும், தீவிரக் கட்சிக்கு உருசியாவில் லெனின்