2. வரலாற்றின் பொருண்மைவாத விளக்கம்
வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொடர்பான ஓர் ஆற்றலாகக் கருதுவது புதிதல்ல. ஆனால் வரலாற்றை இயக்கும் ஆற்றலை ஓர் அக ஆற்றலாக, அதாவது தெய்வீக ஆற்றலாக, அல்லது சமயம், பகுத்தறிவு, விடுதலை ஆகிய உயர் பண்பாற்றல்களாகவே பாசூவெட், பிஃட்டெ, தே மயீஸ்தர் முதலியவர்கள் கருதினர். மார்க்ஸ் அவ்வாற்றலை ஒருபுற ஆற்றல் என்றே கருதினார்.
உலகை இயக்கும் ஆற்றல் உலகு கடந்த ஓர் அக ஆற்றலன்று; உலகிலேயே உள்ள புற ஆற்றல்கள்தான் என்பது பொருண்மைவாதம் (மெட்டிரியலிசம்). இதன்படி உயிர்ப் பண்புகள், மனிதன் எண்ணங்கள், கருத்துகள், செயல்கள் ஆகிவற்றால் உலகம் நடைபெறவில்லை. உலகின் சூழல் காரணமாகவே அவை எழுகின்றன. வரலாற்றை விளக்க ஹெகெல் பொருண்மைவாதத்தை முன்னே பயன்படுத்திய துண்டு. சமூகப் பண்புகளை நில இயற்கூறுகளின் விளைவு களாகக் காட்டவும், நிகழ்ச்சிகளைச் சமூகப் பண்புகளின் விளைவுகளாகக் காட்டவும் அவர் முயன்றதுண்டு. ஆனால் மார்க்சு அவர் முடிவுகளை ஏற்காமல், அவர் முறையைப் பயன் படுத்திப் புது விளக்கங் கண்டார்.
புற
உலகின் சூழல்களும், அவற்றால் ஏற்பட்ட அனுபவங்களுந்தான் மனிதன் கருத்துகளை இயக்குகின்றன என்பதை ஆராய்ச்சியில்லாமலே எவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால் மார்க்சு இந்நிலை கடந்து ஒருபடி மேற்சென்றார். பொதுக் கூறுகளிடையே ஒவ்வொரு காலத்திலும் மற்றெல்லாக் கூறுகளையும்விட மனித சமூகத்தை உருவாக்கும் முனைத்த கூறு பொருள்களின் உற்பத்தி முறையே என்று அவர் கொண்டார். இவ்வுற்பத்தி ஆற்றலே சில சமூக சக்திகளை இயக்கி, அவற்றின் மூலமாக அவ்வக்கால சமூக அமைப்புகளையும் கருத்துக்களையும்