பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

அப்பாத்துரையம் - 45

மார்க்சின் வகுப்புப் போராட்டக் கொள்கை இங்ஙனம் அவர் வரலாற்று விளக்கத்திலிருந்து ஆதரவு பெறுகிறது. ஒவ்வொரு வகுப்புப் போராட்டத்திலும் உடைமை வகுப்பு அதாவது ஆட்சி வகுப்பு நிழலிலிருந்தும், கடமை வகுப்பு அல்லது ஆளப்படும் வகுப்பு தன் வாழ்க்கை பிழைப்புக்காகத் தன் உரிமை போராட்டத்தில், இறங்குவதற்கான சூழ்நிலையாதரவற்றுக் கடுவெயிலில் நின்றும் போராட வேண்டி யிருக்கிறது. இந்நிலையிலும் புதிய சூழல் கடமை வகுப்புக்கு வலுத் தருகிறது. ஆனால் போராட்டமில்லாமல் அவ்வகுப்பினர் உரிமை பெற முடியாது. ஆதிக்க வகுப்பின் நல்லெண்ணத்தையோ, சலுகையையோ எதிர்பார்ப்பதும் மதிப்பதும் தவறு. ஏனென்றால் சலுகை தற்காலிகமாக ஆதிக்க வகுப்புக்கு ஏற்பட்ட சிறு தளர்ச்சிகளையே காட்டுகிறது. அத் தற்காலிக ஓய்வை நிலையான அமைதியாகக் கருதினால் ஆதிக்க வகுப்பு அதைப் பயன்படுத்தித் தன்னைப் பின்னும் எளிதில் வலிமைப்படுத்திக் கொள்ளும். கடமை வகுப்பு அதாவது உழைப்பு வகுப்பு இதனாலேயே சம்பள உயர்வு, வேலை நேரக் குறைவு முதலிய சலுகைகளைத் தன் நோக்கமாகக் கொள்ளாமல், போராட்டத்தின் படிகளாக மார்க்சியம்

மட்டுமே வலியுறுத்துகிறது.

கொள்ளவேண்டுமென்று

ாது.

அதுமட்டுமன்று. பகுத்தறிவு, அன்பு, தேசிய ஒற்றுமை, அகிம்சை, கடவுளருள், விதி முதலிய உயர் கருத்துகளை நம்பியோ, ஆட்சியாளர் தயவை விரும்பியோ, இயற்கை மாறுபாட்டை எதிர்பார்த்தோ உழைப்பு வகுப்பு ஏமாறக்கூடா ஏனெனில் மார்க்சு கூறுகிறபடி “கருத்துகளது வளர்ச்சி தளர்ச்சிகளின் வரலாறு நமக்குக் காட்டும் படிப்பினை புறப்பொருள் சூழல்களைக் கருத்துகள் இயக்குகின்றன என்பதன்று; கருத்துக்களைப் புற உலகச் சூழல்கள் உருவாக்கி இயக்குகின்றன” என்பதே.

வாத

உள்ள

மார்க்சுக்கு முன்னும் பல வரலாற்றாசிரியர் பொருண்மை அடிப்படையில் வகுப்புப் போராட்டங்களைக் அவர்களுக்கும் தமக்கும் வேறுபாட்டை அவர் 1852இல் கீழ் வருமாறு குறிக்கிறார்; "நடுத்தர வகுப்பு வரலாற்றாசிரியர்கள் முன்பே வகுப்புப்

குறிப்பிட்டதுண்டு.