பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஹெரால்டு லாஸ்கியின் பொது உடைமை

93

போராட்ட வளர்ச்சி பற்றி எழுதியதுண்டு. அவர்கள் கூறியவை கடந்து நான் வற்புறுத்தும் செய்திகள் உண்டு. (1) இன்றைய வகுப்புகள் சில பொருள் உற்பத்தி முறைகளுடன் பிணைக்கப் பெற்றுள்ளன. (2) வகுப்புப் போராட்டம் கட்டாயமாக உழைப்பு வகுப்பின் வல்லாட்சிக்கு வழி வகுத்துத் தீரும். (3) இவ் வல்லாட்சி நிலையானதன்று. வகுப்பு ஒழிப்பு, புதிய சுதந்திரம், சரிசம சமூக அமைப்பு ஆகியவை ஏற்படுவதற்கான மாறுதற் காலச் சின்னம் மட்டுமே.”

66

பொதுவுடமைத் தத்துவம் உண்மையான குடியாட்சிக்கு மாறான தல்ல. ஆனால் முதலாளித்துவ சமூகத்தின் குடியாட்சி போலியானது, இரண்டகமானது. லெனின் கூறுவதாவது; "இன்றைய குடியாட்சி முதலாளித்துவச் சுரண்டல் கோட்டையின் குறுகிய மதில்களுக்குள் சிறைப்பட்டுள்ளது.அது உண்மையில் ஒரு சிறுபான்மையின் குடியாட்சி; செல்வர் வகுப்புக்கு மட்டுமே உரிய குடியாட்சி முதலாளித்துவக் குடியாட்சி பண்டைய கிரேக்கக் குடியரசுகள் காலத்திலிருந்து உருவத்தில் மாறியிருக்கிறதே தவிர, பண்பில் மாறவில்லை. அது இன்னும் அடிமைகளை ஆளும் ஆண்டான்களின் குடியாட்சியே. தற்காலக் 'கூலி அடிமைகளுக்கு உடைமை உரிமை இல்லாதபோது அதைக் காக்கும் உரிமை இருந்து என்ன பயன்? அதற்கு அவர்களுக்கு நேரமோ, ஆற்றலோதான் ஏது? இந்நிலையில் மக்களில் பெரும்பாலோரின் இன்றைய குடியாட்சி உரிமை, வாயைக் கட்டிப் பாடவிட்ட உரிமையாகவே இயங்குகிறது.”

குடியாட்சியின் போலித்தனத்துக்கு இரு கூர்கள் உண்டு. ஒன்று: பொருளியல் சமத்துவம் இல்லாத அரசியல் சமத்துவம் தந்து, அது மக்களைக் கேலி செய்கிறது. (இது கைகால்களைக் கட்டி விட்டு ஓடு' என்று அடிப்பது போன்றது.) முதலாளித்துவம் மக்களிடையே அடிமை நிலையையும் அடிமை மனப்பான்மையையும் வளர்த்து விட்டு, விடுதலை வேதாந்தம் அளக்கிறது. இரண்டாவது இந்த விடுதலை வேதாந்தம் கூட முதலாளித்துவ அடிப்படைக்கு இடையூறு ஏற்படாதிருக்கும் வரைதான். அது பேசும் அமைதியான வளர்ச்சி முறையும் (evolution) அதுவரைதான். அவ்விடையூறு வரும் என்ற வாடை