பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

அப்பாத்துரையம் - 45

தட்டினது முதலே, சட்டமாகிய நகங்கள், அடக்கு முறையாகிய கோறைப் பற்கள், எதிர் புரட்சிப் போர் ஆகிய அழிவு நடவடிக்கைகள் தோன்றிவிடும்!

இங்கிலாந்திலுள்ள மக்கள் மட்டும் எப்போதும் இம்சையை வெறுத்து, அமைதியைப் போற்றிப் பேணி வந்திருந்தால், இந்நாட்டில் மக்கள் சுதந்திரங்களை என்றும் பெற்றிருக்கவே முடியாது" என்கிறார். கிளாட்ஸ்டன். இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் ஆட்சியாளருள் இடம்பெற்ற நடுத்தர வகுப்பினரே தம் உரிமைகளைப் பெரும் போரிட்டுப் பெற்றார்களென்றால், உரிமைக்காகச் சரிசம நிலையில் போட்டியிடும் வலுவுமற்ற உழைப்பாளி வகுப்பார், போராட்ட மில்லாமல், அமைதியுடன் எப்படித் தம் உரிமையைப் பெறமுடியும்? நடுத்தர வகுப்பினர் பிரிட்டனில் 1642இல் உள்நாட்டுப் போரையும், பிரான்சில் 1789இல் புரட்சியையும் நடத்தி உரிமை பெற்றது போல், உழைப்பு வகுப்பும் உலகெங்கும் போராட்டம் நடத்தியே உரிமைபெற முடியும் என்பது கூறாமலே அமையும்.

மார்க்சீயத்தின் குறைபாடு ஒன்றே ஒன்றுதான். புரட்சி கட்டாயமாக வந்து தீரும்; பொதுவுடைமை கட்டாயமாக நடந்து தீரும் என்று மார்க்ஸ் கூறுவது நடைமுறைக்கு முற்றிலும் பொருத்தமன்று. வகுப்புப் போராட்டம் நாஜியர் கட்சி போன்று: முதலாளித்துவச் சார்பான நடுத்தர வகுப்பு வல்லாட்சிக்கோ அல்லது முதலாளித்துவ ஆட்சியாளரின் முன்னெச்சரிக்கை யான சீர்த்திருத்தங்களுக்கோ வழிவகுக்கக் கூடும். ஆயினும் இந் நம்பிக்கை வெற்றிக்கு முயல்பவர் ஊக்கத்துக்கு அவசியம் என்பதில் தடையில்லை.