பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. பொருளியல் கோட்பாடு

பொதுவுடைமையின் பொருளியல் கோட்பாடு பெரிதும் மார்க்சின் 'முதலீடு' விளக்கும் விளக்கும் கோட்பாடே. மற்றப் பொதுவுடைமை வாதிகள் அனைவர் கருத்துகளும் அதற்கு ஆதரவான விளக்கங்களாக மட்டுமே அமைகின்றன.

மார்க்சீய பொருளியலின் அடிப்படைக் கூறுகள் இரண்டு. அது அறிஞர் லோக்கினால் முதன் முதல் குறிக்கப்பட்டு, ரிக்கார்டோ, ஆடம் ஸ்மித் ஆகியவர்களால் விளக்கந் தரப்பட்ட விலைமதிப்புப் பற்றிய உழைப்புக் கோட்பாட்டை விரிவுபடுத்து கிறது. அதனடிப்படையாக அது உழைப்பாளர்க்குரிய மிகைமதிப்பை முதலாளி வகுப்பு கைப்பற்றிக் கொள்ளை கொள்கிறது என்று நிலைநாட்டுகிறது.

மார்க்சின் விலை மதிப்புக் கோட்பாடு இது

பொருளின் மதிப்பு அதன் பயனையும் விலையையும் பொறுத்தது. பயன் பண்படிப்படையாக வேறுபடுகிறது. இதை அளக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் சமயத்திலும் ஒரு பண்பு தேவைப்படுகிறது. மாணவனுக்கு ஒரு சமயம் வாசிக்க ஏடும், மற்றொரு சமயம் உண்ண உணவும், அதுபோல தொழிலாளிக்கு ஒரு சமயம் உண்ண உணவும், மற்றொரு சமயம் உடுக்க உடையும் தேவைப்படுகின்றன. இத்தேவைப் பண்பு அளக்க முடியாதது. அதே சமயம் பொருளின் விலை மதிப்பு அளவிடப்படுவது. அது பயனை ஒட்டிய தன்று. லோக், ரிக்கார்டோவைப் பின்பற்றி மார்க்சு அதை உழைப்பின் பயன் என்று குறிக்கிறார். அத்துடன் மக்கள் சமூக முறைப்படி மதிப்பிட்ட ஒரு பொது உழைப்பளவையின் படியே, இத்தனை மணிநேர உழைப்பை அது குறிக்கும் என்று வரையறுத்த அளவே பொருளின் உண்மையான விலை மதிப்பு என்று அவர் கொள்கிறார்.