96
அப்பாத்துரையம் - 45
தொழிலாளருக்குத் தரப்படும் கூலி அவன் உழைப்புக்கு முதலாளி தரும் விலை. அவன் உழைப்புக் காலத்தில் அவன் வாழ்வுக்கு இன்றியமையாத் தேவையளவாக அது பேரத்தால் வரையறுக்கப்படுகிறது. உழைப்பாளன் உழைப்பின் பயனாகக் கிடைத்த பொருளில் உற்பத்திச் சாதனங்களின் உழைப்புக் காலப் பயனீட்டு மதிப்பு, மூலப் பொருள் மதிப்பு ஆகியவற்றைக் கழித்தால், மீந்த பகுதி அவன் உழைப்பின் உண்மையான மதிப்பு ஆகும். இது அவன் உழைப்புக்கு முதலாளி தந்த விலையாகிய கூலியை விட எப்போதும் கூடுதலாகவே இருக்கிறது. இதுவே ‘மிகை மதிப்பு' என்று மார்க்சினால் குறிக்கப்படுகிறது. முதலாளி தொழிலாளியின் ஒரு நாகரிக உழைப்பை வாங்கி விட்டதனால், உழைப்பு மணி நேரத்தைக் கூட்டி அவன் இதனைப் பெருக்கலாம். இந்நேரம் கட்டுப்படுத்தப்பட்ட பின்னும் உழைப்பாளியின் உழைப்புத் திற வளர்ச்சி, அவர்கள் ஒரே இடத்தில் கூடியுழைப்பதால் ஏற்படும் கூட்டுறவுப் பயன், புதிய உற்பத்தி முறைகளின் பயன் ஆகிய பல வழிகளால் தொழிலாளிக்குரிய இம்மிகை மதிப்பை எல்லையின்றிச் இச்சுரண்டுதல் என்றும் வளர்ந்து வருகிறது.
சுரண்டுகிறான்.
மார்க்சின் இவ்விளக்கம் பேரளவில் உண்மை நிலையை வகுத்துக் காட்டுவதே. ஆனால் அறிவாராய்ச்சி முறையில் அவர் கோட்பாட்டில் குறை இல்லாமல் இல்லை. பொருளின் உண்மையான மதிப்பையே அவர் விலை மதிப்பாகக் கொண்டு அதிலிருந்து மிகைமதிப்பைக் கணக்கிடுகிறார். உண்மையான மதிப்பு வேறு, விலை மதிப்பு வேறு என்பதையும் அவரே குறிக்கிறார்.ஆயினும் இரண்டின் வேறுபாடும் போட்டிஅதாவது முதலாளித்துவ அறிஞர் கூறும் தேவை-தருவிப்புப் பேரத்தினால் அமைவது என்பதை அவர் மழுப்பிவிடுகிறார். அவர் தோழர் எங்கெல்சு அவர் குறிப்புக்களிலிருந்து தொகுத்துருவாக்கிய முதலீட்டின் 2ஆம், 3ஆம் ஏடுகளில் இது ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. ஆனால் இது முதல் ஏட்டில் கண்ட மார்க்சின் கோட்பாட்டுக்கு மாறுபாடானது.
மார்க்சிய பொருளியல் கோட்பாட்டின் தலைசிறந்த பகுதி 'மிகை மதிப்பே! அடுத்தபடியாகக் கூறக்கூடிய பகுதி 'நிலை முதலீடு (Constant Capital), மாறுபடு முதலீடு (Variable Capital)