ஹெரால்டு லாஸ்கியின் பொது உடைமை
97
என்ற முதலீட்டுப் பாகுபாடே. உற்பத்திச் சாதனங்களும் மூலப் பொருளும் கிட்டத்தட்டத் தொழிலில் நிலையான அளவில் தேவைப்படுவதால் அவை நிலை முதலீடு ஆகும். உழைப்பு கூடுதல் குறைவாகத் தேவைப்படுவதால் அது மாறுபடு முதலீடு ஆகும். ஆதாயம் அடிக்கடி மாறுகிறது. இது நிலை முதலீட்டின் பயனாக ஏற்பட முடியாது. மாறுபாடு முதலீட்டாலேயே ஏற்படக்கூடும். மிகை மதிப்பு இதனால் தொழிலாளர்க்கே முற்றிலும் உரியது. உழையாத முதலாளிக்கு ஆதாயத்தில் பங்கு உரியதன்று என்பதை இதனால் மார்க்சு காட்டுகிறார்.
இதிலும் அறிவுத் துறையில் ஒரு குறைபாடு ஏற்படுகிறது, நிலை முதலீட்டினால் ஆதாய உயர்வு தாழ்வு விளக்கப்பட முடியாது. ஆனால் மாறுபாடு முதலீட்டின் உயர்வு தாழ்வு விகிதத்திலேயே அது உயர்வுதாழ்வு பெறுவதாகக் காட்டவும் முடியாது. இங்கும் எங்கெல்ஸ் போட்டித் தத்துவத்தைக் கையாண்டு புது விளக்கவுரை காண்கிறார். சமூகத்தின் மொத்த மாறுபடு முதலீட்டுக்கு ஒத்தே சமூகத்தின் மொத்த ஆதாய உயர்வு தாழ்வு இருக்கிறது என்றும், போட்டி காரணமாக பங்குக் களப்போட்டியில் நடை பெறுவதுபோல, மிகுதி முதலீடு இடுபவர்க்கு மிகை மதிப்புக்கூடியும் குறைந்த முதலீடு இடுபவர்க்கு அது குறைந்தும் இயல்கிறது என்று அவர் கூறுகிறார்.
நேர நீட்டிப்பின்போது ஒவ்வொரு மணிநேர உழைப்பினாலும் முதலாளிக்குக் கிடைத்த மிகை மதிப்பை மார்க்சு ‘தனி மிகை மதிப்பு' (Absolute Surplus Value) என்றும் நேரத்தை நீட்டிக்க முடியாதபோது புதிய இயந்திர முன்னேற்றம் முதலிய வகைகளால் நேரத்தின் உழைப்பு மதிப்பைப் பெருக்கும்போது கிடைக்கும் மிகை மதிப்பைச் ‘சார்பு மிகை மதிப்பு' (Relative Surplus Value) என்றும் குறிக்கிறார். இப் புதிய முறையால் உழைப்பாளர் மதிப்புக் குறைகிறது. தொழிலாளர் வேலையில்லாமை இதனால் ஏற்பட்டு, உழைப்பாளர் போட்டியால் மதிப்பு இன்னும் தாழ்ந்துகொண்டே போகிறது.
சார்பு மிகை மதிப்புக்காக முதலாளி மாறுபடு முதலீட்டைக் குறைத்து நிலை முதலீட்டைப் பெருக்கிக் கொண்டே போகிறான். இதனால் தொழில் துறையில்