பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

அப்பாத்துரையம் - 45

முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாகவும், அரசிய லாட்சி தொழில் முதலாளி, பண முதலாளி ஆகியவர்களின் கூட்டுறவால் ஏற்பட்ட சிறுகுழு ஆட்சியாகவும் மாறுகிறது. உழைப்பவர் தொகையும் தொழிலில்லாதவர் தொகையும் பெருகுவதாலும், உழைப்பவர் மொத்த வருவாய் குறைவதாலும் பொருள்களை வாங்கும் சமூக ஆற்றல் குறைகிறது. பொருள்கள் மட்டும் பெருகி அடிக்கடி வாணிக, தொழில் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. சமூகத் தேவைக்கேற்ற பொருள்களில் முடையும், தேவையற்ற பொருள்களில் பெருக்கமும் உண்டாகிறது.

உற்பத்தி செய்யும் தொழிலாளரின் மனிதப் பண்புகள் கெடுகின்றன. நல்வாழ்விலிருந்தும், கல்வி கலைகளிலிருந்தும், தொழிலை வளர்க்கும் அறிவியலிலிருந்தும் அவர்கள் பிரித்து வைக்கப்பட்டு அழிகின்றனர். பூரியிலுள்ள ஜகன்னாதர் தேரைப் போல அது தொழிலாளி வாழ்வைத் தன் பாரிய சக்கரங்களிலிட்டு நசுக்கிக்கொண்டு செல்கிறது!

தொழில்

முதலாளித்துவம் முற்காலத்திய

பிற

முதலாளித்துவ முறைகளைவிட மனித இனத்துக்குப் பெருத்த நன்மைகள் செய்துள்ளது என்பதை மார்க்சும் பொதுவுடைமை வாதிகளும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் உலகின் பெரும் பாலான மக்களாகிய உழைப்பினத்தினரை

அந்நலன்களிலிருந்து பிரித்து வைக்கிறது.

அது

உற்பத்தியாற்றல் பெருக்கம், பயனீட்டாற்றல் குறுக்கம் ஆகிய வற்றின் பயனாக, முதலாளித்துவம் தன் முரண்பாடுகளால் தானே அழியும் என்ற மார்க்சு கூறினார். அவருக்குப் பின் அவர் உரைகள் அவர் எதிர் பார்த்த அளவைவிட மிகுதியாக உண்மையாகிவிட்டன. 'ஏகாதிபத்தி யத்துவம்' என்ற நூலில் லெனின் எழுதுவதாவது: "வரவர மிகுதியாக நிலை முதலீட்டைச் சார்ந்து வளரும் போக்கால், மூலப் பொருள் வேட்டைக்காக மேனாடுகள் உலகெங்கும் அலைகின்றன. ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பசிபிக்கிலும் இதற்காக அம்முதலாளித்துவ நாடுகள் தம் சுரண்டல் ஆட்சியைப் பரப்பி வருகின்றன.செல்வர் சிறு குழுவாட்சியும், ஏகபோக முதலாளிகள் ஆட்சியும், வட்டிக் கடைக்கார ஆட்சியும் ஏற்பட்டு ஒரு சிலருக்காகக் கோடிக் கணக்கான மக்கள் வாழ்வை அலைகழித்து வருகின்றன”