பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஹெரால்டு லாஸ்கியின் பொது உடைமை

101

மெய்மையை உணர்த்தவில்லையானாலும், அதன் போக்கை உணர்த்துகிறது என்பதில் ஐயமில்லை.

அரசியல் பற்றிய மிகப் பெரும்பான்மையோரின் கருத்து மேற்கூறிய குறிக்கோளே என்பதில் ஐயமில்லை. சுதந்திரம், சமத்துவம் இக்குறிக்கோளின் அடிப்படை ஆகும். ஆனால் இதற்கு மாறுபட்ட கருத்துகளும் உண்டு. ஒன்று லிங்குவெட், தேமயீஸ்தர், பொனால்டு ஆகியவர்கள் கருத்து. சுதந்திரமும் சமத்துவமும் கைகூட முடியாதவை மட்டுமல்ல, விரும்பத்தக் கவையுமல்ல என்று அவர்கள் கருதுகின்றனர். ஒரு சிலர் நலங்களுக்காக மிகப்பெரும்பாலார் தம் நலங்களை விட்டுக் கொடுப்பதே சமூக அமைப்பின் இன்றியமையா நிலையான அடிப்படை என்கின்றனர். உரிமையிழந்த அப்பெரும்பாலாருக்கு மயீஸ்தரும், பெர்னால்டும் வழங்கும் ஆறுதல் சமய உணர்ச்சி சார்ந்த ஆறுதல் மட்டுமே. இக்கருத்து பிற்போக்காளர் கருத்து எனக் குறிக்கப்படலாம்.

குறிக்கோள் அரசியல் கருத்தை எதிர்க்கும் மற்றொரு அரசியல் கருத்து பொதுவுடைமைக் கருத்தே. இது பிற்போக்காளர் கருத்துடன் ஒரே ஒரு வகையில் இணைந்துள்ளது. பெரும்பான்மை மக்களின் சுதந்திரம் இரு கருத்துகளாலும் எதிர்க்கப்படுகின்றன. ஆனால் பெரும் பாலான மக்களுக்குப் பிற்போக்காளர் காட்டும் ஆறுதல் மேலுலக ஆறுதல். பொது உடைமை யாளர் தரும் ஆறுதல் இவ்வுலக ஆறுதல். அத்துடன் சுதந்திரம் என்ற ஒன்று நீங்கலாக மற்றெல்லா வகைகளிலும் பொது வுடைமைக் கருத்து குறிக்கோள் கருத்தை நோக்கியே செல்கிறது. அது பெரும்பாலார் உரிமைகளை மறுத் தாலும், பெரும்பாலார் நலங்களை வற்புறுத்துகிறது. எல்லார் சரி சமத்துவத்திற் காகவும் நலங்களுக்காகவுமே உரிமைகளைத் தடையின்றி வழங்குகிறது. அதுவும் தற்காலிக மாகவே.

மார்க்சீயவாதி அரசியலையே ஓர் அட்டூழியக் கருவியாகக் கருதுகிறான்.அதைத் தகர்த்தொழிப்பதன் மூலமே உண்மையான சுதந்திரம் ஏற்படும் என்று கூறுகிறான். ஏனெனில் தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டும் முதலாளித்துவ சமூக அடிப்படையில், அச்சுரண்டலைப் பாதுகாக்கவே அரசியல் அமைந்துள்ளது. குடியாட்சி பற்றிய குறிக்கோளை அவர்கள்