பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

|-

அப்பாத்துரையம் - 45

போலிப் பசப்பு என்று நையாண்டி செய்கின்றனர். புக்காரின் கூறுவதாவது: “எல்லா நாட்டிலுமே அரசியல் என்பது ஆண்டார் வகுப்பின் ஒரு கூட்டுறவாகத் தான் இருக்கிறது. எங்கும் அமைச்சரும், உயர் பணி யாளரும், அரசியல் மன்ற உறுப்பினரும் முதலாளிகள், பெரு நிலக்கிழவர், ஆலைமுதல்வர், அல்லது அவர்கள் ஆட்களான பொருளக மேலாளர், வழக்குரைஞர் முதலியவர்களாக இருப்பதையே காண்கிறோம்.”

இவ் அரசியலின் நோக்கங்கள் இரண்டு. ஒன்று உற்பத்திச் சாதனங்களின் மீது முதலாளி வகுப்பிற்குள்ள பிடியைக் காத்து வலுப்படுத்துவது. சட்டமும் காவற்படைத்துறையும், இறுதிக் கட்டங்களில் படைத் துறையும், அமைந்திருப்பது இதற்காகவே. நாட்டுப் பகைமை, அரசியல் அவதூறு முதலியவற்றிற்கான குற்றச் சட்டங்கள் உழைப்பு வகுப்பினர் சார்பான எதிர்ப்பை அடக்குவதற்காகவே அமைந்துள்ளன. மனிதர் உயிருக்கு ஏற்படும் டையூற்றைவிட முதலாளிகளின் உடைமைகளுக்கு ஏற்படும் டையூறே குற்றச் சட்டங்களின் முழுக் கனிவைப் பெறுகிறது. அரசியலின் இரண்டாவது நோக்கம் பிற அரசுகளின் தாக்குதல், போராட்டங்களைச் சமாளிப்பது என்பதே. இதன் பொருள் எப்போதும் போருக்கு ஏற்பாடு செய்வது என்பதே.

பொதுவுடைமைக் கோட்பாட்டின்படி பள்ளிக்கூடங்கள் முதலாளித்துவ அடிப்படையான அரசியலின் நலத்துக்கான பயிற்சிக் கூடங்களே. அவை போர் செய்யும் வெல்லிங்டன் போன்ற தன்னல அடிமைகளை உயர்வுபடுத்தி வணங்கவும், உண்மை ழியர்களான ஜான் பால் போன்றவர்களை அலைக்கழிக்கவும் மக்களைப் பயிற்றுவிக்கும் அடிமை நிலையங் களேயாகும். சமய நிலையங்களும் இதே அடிமைப் பண்பைத் தான் வளர்க்கின்றன. ஆற்றல் எல்லாம் கடவுளருளியது என்று கூறி அது முதலாளித்துவ அரசியலை எதிர்க்கத் துணிபவருக்கு அரசியல் தண்டனைக்கு மேலாக அதனிலும் அஞ்சத்தக்க கற்பனைப் பழிபாவ அச்சங்களையும் அளிக்கிறது.

குடியாட்சியும் மொழியுரிமையும் பரவுந்தோறும் ஆட் விரிவு படவில்லை. இன்னும் குறுகுகிறது. ஏனெனில் பரந்த அரசியல் அமைப்பை

ஆளச் செல்வரும் ஆட்சிப் பயிற்சியுடையவரும் தேவை. மக்கள் தேர்தல் உரிமை என்பது