ஹெரால்டு லாஸ்கியின் பொது உடைமை
103
முழுவதும் 'காக்கை வேண்டுமா, அண்டங்காக்கை வேண்டுமா என்ற தேர்வுரிமையுடன் நிற்கிறது. அத்துடன் பிரிட்டனில் அரசியல் மன்றம் நடைமுறை ஆட்சியாளர் பிடியிலுள்ளது. பிரான்சிலும் அமெரிக்காவிலும் நடைமுறையாட்சியாளருடன் அவர்கள் இடும் போட்டியால் அவர்கள் வலுவற்றவர்களா கின்றனர்.
க்
பொது
புரட்சிச் சூழல் ஏற்படுத்தும் வரையில் வுடைமைவாதி குடியாட்சி மரபைப் பயன்படுத்தத் தயங்கவில்லை. தனி மனிதன் ஆட்சி யாகிய கடுங்கோன்மை; உயர்குடிச் சிறப்புரிமை; மொழியுரிமை வகையில் உடைமைத் தகுதி ஆகியவற்றின் ஒழிப்பு வகையில் அவன் குடியாட்சியைப் பாராட்டுகிறான்.தொழிற்சங்க இயக்கம் வளரக் குடியாட்சியைப் பயன்படுத்த வும் அவன் தயங்கவில்லை. ஆனால் முதலாளித்துவ சமூக ஆட்சியை ஒழிக்கக் குடியாட்சி ஒருபோதும் பயன்படாது சி என்றும்; புரட்சி யடிப்படையில் அரசியலைக் கைப்பற்றித் தற்காலிகமாக உழைப்பு வகுப்பின் வல்லாட்சி அமைப்பதன் மூலமே அதைச் சாதிக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்.
வல்லாட்சியைப்
பொதுவுடைமை ஒரு
ஆனால் இன்றியமையா - இடைக்கால முறையாகவே கருதுகிறது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று அவர்கள் வரையறுக்கவில்லை. ஆனால் முதலாளித்துவத்தின் மரபுகள் அழியும்வரை அது நீடிக்கும். அது உற்பத்தியைப் பெருக்கிச் சமூக ஒழுங்கை வளர்க்கும். இயல்பாகப் பொதுவுடைமைச் சமூகம் இதனால் வளரும். அது வளர வளர, அரசியல் படிப்படியாகத் தேய்ந்து மறையும். அரசியல் தேவையற்ற நிலையிலுள்ள ஒரு சமூகம் ஏற்படும். அதில் தேவைக் கேற்றபடி விரும்பிய அளவு ஊழியம். சக்திக்கேற்றபடி கூடிய மட்டும் மனமார்ந்த உழைப்பு ஆகியவை நிலவும். இதுவே பொதுவுடைமையின் குறிக்கோள் அரசியல்.
இக்கோட்பாடு அரசிலா நிலை அன்று. ஏனெனில் இது ஒழுங்கை நாடுகிறது. அது விடுதலையை மதிக்கவில்லை. ஆனால் உண்மை விடுதலைக்காகவே, விடுதலையின் பயனான நலங்களுக்காகவே, அது விடுதலையையும் பொதுவுடைமை யாக்கி ஆட்கொள்கிறது.