112 ||.
4. மண வாழ்வு
அப்பாத்துரையம் - 45
ஷேக்ஸ்பியர் 1582இல் ஆன் ஹாட்டவே என்ற மாதினை மணந்தார். அவர் ஷேக்ஸ்பியரைவிட எட்டாண்டுகள் முதிர்ந்தவர். அவர்கள் மணவினை ஒழுங்கு முறைப்படி நடவாது சற்று விரைவுபட்டே நடந்ததாகத் தெரிகிறது. ஆகவே, மணவினைக்குமுன் களவியல் முறைப்படி காதல் நிகழ்ந்து மறக்கமுடியா எல்லைக்குச் சென்றிருக்கும் என்று எண்ணலாகும். அதற்கேற்ப மணவினை கழிந்த ஆறாம் திங்களிலேயே அவர் முதற் குழந்தையாகிய சூசன்னா பிறந்தார்.
அதன்பின் 1585இல் ஹாம்னெட், ஜூடித் என்ற இரு புதல்வியர் இரட்டையராகப் பிறந்தனர். இம் மூன்று புதல்வியரைத் தவிர ஷேக்ஸ்பியருக்கு வேறு புதல்வர் இல்லை. அவருள் இளைய புதல்வியான ஜூடித்தி னிடமே ஷேக்ஸ்பியர் மிகவும் பற்றுடையவராயிருந்தனர் என்று தெரிகின்றது. 'புயற்காற்’றில் கதைத் தலைவியான மிராந்தா, ஷேக்ஸ்பியரின் தந்தையுள்ளத்திற் படிந்த ஜூடித்தின் படிவமே என்று கூறப்படுகின்றது.
5. இலண்டன் செல்லல்
ஷேக்ஸ்பியர் கிட்டத்தட்ட, 25 ஆண்டளவில் ஸ்ட்ராட்ஃபோர்டை விட்டு இலண்டனுக்கு வந்தார். அவர் ஏன் ஸ்ட்ராட்ஃபோர்டை விட்டு வந்தார் என்பதுபற்றியும், இலண்டனில் வந்து முதல் முதலில் எத்தொழிலில் அமர்ந்தார் என்பது பற்றியும் வேறுவேறான செய்திகள் கூறப்படுகின்றன. ஷேக்ஸ்பியருக்கடுத்த தலைமுறையில் ஸ்ட்ராட்ஃபோர்டில் வாழ்ந்த ஜான் டௌடல் (John Dowdall) என்பவர் “ஷேக்ஸ்பியர் இந்நகரில் ஊன் வினைஞர் கடை ஒன்றில் முதற் பயிற்சியாளரா யிருந்தார். முதலாளியுடன் சச்சர விட்டதன்
பயனாக
லண்டனுக்கு ஓடிப்போய் அங்கே நாடகசாலை ஒன்றில் கையாளாய் அமர்ந்தார்” என்று எழுதியுள்ளார். 'திருவாளர் ஷேக்ஸ்பியரது வாழ்வும் காலமும்' என்ற நூலில் 'ரோ' என்பவர் கூறுவது வேறு வகை. "ஸ்ட்ராட்ஃபோர்டின் பெரு நிலக் கிழவரான ஸர் தாமஸ் லூயி என்பவரது காவற்காட்டில் ஷேக்ஸ்பியரும், அவர் தோழர் சிலரும் எல்லை மீறிச் சென்று