பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

115

ஒருவரின் நன்றிகோரலைப் பற்றியும் வாசிப்பவர் மனத்தை ஆழ்ந்து ஈர்க்கும் வகையில் உருக்கமாக விரித்துரைக்கின்றன. இத் தொடர்ப்பாக்களிற் கூறப்பட்ட காதல் முறிவும், நட்பு முறிவுந்தாம் ஷேக்ஸ்பியர் உள்ளத்தின் ஆழத்தைக் கிளறி எழுப்பி அவரது நடுவாழ்வுக் காலத்துத் துன்பியல் நாடகங்களுக்குக் காரணமாயிருந்தன என்று எண்ணவேண்டும்.'அடங்காப்பிடாரி, 'அதேன்ஸ் நகர்ச் செல்வன் தைமன்' என்ற இரண்டு நாடகங்களும், காதல் முறிவு, நட்பு முறிவு என்பவற்றால் ஷேக்ஸ்பியர் மனநைந்து தமது கலைத்திறங்கூடச் சிதையும் படி அமைதி கெட்ட நிலையில் எழுதப்பட்டிருக்கலாம் என்று எண்ண இடமுண்டு. ஷேக்ஸ்பியர் கையும் உளமும் பண்படாத காலத்தில் எழுதப்பட்ட நாடகங்களினும்விட இவ்விரண்டுங் கீழ்நிலைப் பட்டு விட்டதற்கு, இதனினும் வேறு காரணம் காண்டலரிது.

7. முதற் பயிற்சிகள்

ஷேக்ஸ்பியரின் முதல் மூன்று நாடகங்களிலும் அவர் பிறருடன் ஒத்துழைத்தது மட்டுமன்று: அவற்றில் அவர் எழுதிய பகுதியிலும் அவர் முற்றிலும் தற்சார்பும் தன்னிலையும் பெறாது பிறரைப் பின்பற்றவே முயலுகின்றார். யாப்பு முறையில் கிரீனையும், அணிகள் சொல்லடுக்குகள் வகையில் லிலியையும் பின்பற்றுவதுடன் நாடகப் போக்கிலும் அவர் இப் பருவத்தில் மார்லோவின் சுவடுகளைத் தழுவுகின்றார். மார்லோவின் கதை யுறுப்பினரைப்போலவே இவருடைய கதை யுறுப்பினரும் ஓங்கி யறைந்து பேசியும், கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் மிகைபட எடுத்துக் காட்டியும் இட நிரப்புகின்றனர். தங்கால மக்கள் விருப்பத்திற்கிணங்க மார்லோ கொலைகளை ளயும் ஆரவாரக் காட்சிகளையும் தம் நாடகத்தில் நிறைத்தனர். ஷேக்ஸ்பியரும் இந் நாடகங்களில் இப் பகட்டான முறை களையே பின்பற்றுகின்றார். ஆயினும், அவர் கையின் நயமும் உணர்ச்சிகளின் உள்ளார்ந்த ஆழமும் இங்கும் அவருடைய எதிர்காலச் சிறப்பைச் சுட்டிக்காட்டுவனவாய் விளங்குகின்றன.

தன்னிலை அடைந்தபின் எழுதப்பட்ட முதற்படியான நாடகங்கள், 'மாறாட்டத்தால் நேர்ந்த போராட்டம்', 'வெரோணாவின் இரு செல்வர்கள்', 'காதற் சீரழிவு', ரு 'ரோமியோவும் ஜூலியட்டும்', 'நடுவேனிற் கனவு' ஆகிய