(116) ||.
அப்பாத்துரையம் - 45
ஐந்துமேயாம். இவற்றுள் முதன் மூன்றிலும் பாமுறை கிட்டத் தட்ட கிரீனின் பாமுறையாகவே இருக்கின்றது. ஒவ்வோரடியும் ஒரு முடிந்த வாசகமாய்க் கிட்டத்தட்ட ஒரே படித்தாகத் தோற்றுகின்றது. கதை உறுப்பினர் இயற்கைக் கொவ்வா வண்ணம் இரட்டை இரட்டையாய் வருவதுடன் பிற்கால நாடகங்களைப் போல் பண்பு வேறுபாடுகளின்றிப் பெயர் மட்டிலும் வேறுபட்டுக் காண்கின்றனர். கோமாளிகள் வெறுஞ் சொல் புரட்டுக்களில் மட்டுமே கிடந்துழலுகின்றனர். ஆயினும் கடைசி இரண்டு நாடகங்களும் இரண்டு வகையில் ஷேக்ஸ்பியரின் நாடகங்க ளுள்ளும் உலக இலக்கியத்துள்ளுமே தலைசிறந்து விளங்குகின்றன. 'ரோமியோவும் ஜூலியட்டும்' பாட்டியல்பிலும் 'காதல், காதல், காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல்' என்ற காதல் நிலையை விளக்கும் முறையிலும் முக்காலத்திலும் ஒப்பற்றதாக விளங்குகின்றன. 'நடுவேனிற்கனவு'ம் வனதெய்வ உலகின் ஒப்பற்ற படைப்பில் இணையற்றதே. கதையுறுப்பினரின் பண்பாட்டு வகையிலும் இது முன்னைய எல்லா நாடகங்களையும் விட மிகவும் சிறப்புடையது.
8. நாடகங்கள்
ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் களிநிலை அல்லது ன்பியல்கள் என்றும், உயர்நிலை அல்லது துன்பியல்கள் என்றும் பழைய வெளி யீடுகளில் பிரித்திருந்தனர். இப்பாகுபாடு பண்டைய கிரேக்கரிட மிருந்து புலவருலகம் மேற்கொண்ட ஒன்று ஆகும். உயர்நிலைகள் மலையாள நாட்டில் இன்னும் ஆடப்படும் ஒட்டந்துள்ளல் அல்லது சாக்கியர் கூத்துப் (பழந் தமிழ்ச் சாக்கையர் கூத்து) போன்றது: களிநிலைகள் வெறுங்கேலிக் கூத்துகள். நன்மை தீமை பாராமலே ஸாக்ரதேஸ் போன்ற அறிஞரையுங் கூடக் கேலிக்கூத்துகள் எதிர்த்து நகையாடின. ஷேக்ஸ்பியரிடம் கிரேக்க உயர்நிலைகளிலும் மேம்பட்ட உயர்நிலை நாடகங்கள் உள்ளன. ஆனால், அன்பும் அருளும் அற்ற கிரேக்கக் கேலிக்கூத்து வகைக்கு அவரிடம் இட மில்லை எனலாம். எனவே, ஷேக்ஸ்பியர் நாடகங்களுள் இன்ப நிறைந்த நாடகங்களைக் களிநிலைகள் என்பதை விட இன்பியல்கள் என்பதே பொருத்தமுடையதாகும்.