118 ||
அப்பாத்துரையம் - 45
அல்லது 'இரவலர் இசையாட்டம்' என்பதும் மட்டுமே இத்துறையில் சிறப்புப்பெற்ற ஆங்கில நூல்களாகும்.
ஷேக்ஸ்பியரின் நடுவாழ்க்கைக் காலத்தை ஒட்டிய முழுமுதல் இன்பியல் நாடகங்கள் எட்டு. இவற்றுள் துன்பத்தின் அறிவு பெற்ற கனிந்த இன்பநிலை காணப்பெறுகின்றது. இந் நாடகங்களில் முதற்படியான நாடகங்களை விடப் பாமுறையும், சொற்செறிவும், நாடக அமைப்பும், வாழ்க்கையுணர்வும் மேம்பட்டிருப்பதைக் காணலாம். இவற்றுட் சிலவற்றில் துன்பத்தின் தொடர்பு வெளிப்படையாகவும் சிலவற்றில் மறைந்தும் நிற்கின்றது. கிட்டத்தட்ட துன்பியலாய் இறுதியிற் சற்றே இன்பியல் பூச்சுப் பூசப் பெற்றது ‘வெனிஸ் வணிகன்', உள்ளூறத் துன்பங் கனிந்து இன்ப மிகுப்பது ‘பன்னிரண்டாம் இரவு'. துன்பம் புதைந்து குமுறுவது ‘சரிக்குச் சரி’ துன்புத்தின்மீது தாவிக் கிட்டத்தட்ட இன்ப வண்ணமாய் உலாவுவது ‘மனம்போல வாழ்வு'.
இந்நடு வாழ்க்கைக்கால நாடகங்களுள் 'நான்காம் ஹென்றி’யும் ‘ஐந்தாம் ஹென்றி'யும் வரலாறுகள். மேற்கூறிய இன்பியல்களுள் 'வெனிஸ் வணிகன்', 'வின்ட்ஸாரின் இன்நகை மாதர்’ ஆகிய இரண்டும் துன்பியல் நாடகங்களின் தொடக்க மாகிய 1600ஆம் ஆண்டுக்கு முந்தியவை. அதன் பின்னும் துன்பியல் நாடகங்களுக்கு இடையிடை எழுதப்பட்டவையே. 'மனம்போல வாழ்வு', 'நன்கு முடிவுறின் நலமேயனைத்தும்', ‘பன்னிரண்டாம் இரவு, 'சரிக்குச் சரி’ ஆகியவை. சிறந்த துன்பியல் நாடகங்களை அடுத் தடுத்து இச்சிறந்த இன்பியல் நாடகங்கள் எழுதப்பட்ட தொன்றே 'உண்மை யின்பமுந் துன்பமும் ஒன்றிய உடன் பிறப்புக்கள்' என்பதற்குச் சான்று எனலாம்.
(b) இடைக் காலம்
ஷேக்ஸ்பியரின் நடுக்காலத் துன்பியல் நாடகங்கள், நாடக அமைப்பிலும் சரி, பொருட் செறிவிலும் நேர்மையிலும் சொல்வளத்திலும் சரி, அன்றி இவையத்தனையிலும் சரி, சமமாக ஒத்த மொழி நடையிலும் சரி, மாந்தர் உள்ளத்தின் ஆழத்தையும் அகலத்தையும் அளந்தறியும் ஆற்றலிலும் சரி, ஷேக்ஸ்பியர் நூல்களிடையேயும் பிறர் பிறநாட்டினர் நூல்களிடையேயுங் கூட,