பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

119

ஒப்புயர்வற்ற தனிப்பெருந் தகுதியுடையன. இத் தன்மை வாய்ந்த வ்வகன்ற துன்பியல் மாளிகைக்கு ‘ஜூலியஸ் ஸீஸ'ரே முன்வாயிலும், முதற்படியும் ஆகும். 'ஹாம்லெத்' அதன் இடமகன்ற முற்றம். 'ஒதெல்லோ' அதன் கோபுரவாயில். 'மாக்பெத்' அதன் கொலை மன்றம். 'லியர்மன்ன'னோ அதன் வானளாவிய உப்பரிகையும் எழுநிலை மாடங்களும். 'கோரியோ லான’ஸூம் ‘அந்தோணி'யும் 'கிளியொப் பாத்ராவும்' அதன் புறமதிலும் பூங்காவும் ஆகும். 'திராய்ல'ஸும் ‘கிரெஸிதா'வும் அதன் பழம்பொருட் சேம அறை.

துன்பியல்களான இவ்வெட்டனுள்ளும் ஹாம்லெத், ஒதெல்லோ, மாக்பெத், லியர் ஆகிய நான்குமே ஷேக்ஸ்பியரின் ஒப்பற்ற நான்மாடக் கூடங்கள் எனக் கொள்வர். ஷேக்ஸ்பியர் ஆராய்ச்சியாளரிற் சிறந்த பேராசிரியர் பிராட்லி (Prof. Bradley).

(c) கடைக் காலம்

துன்பியல்களைவிடக் கடைசி நாட்களில் எழுதப்பட்ட ‘புயற்காற்று,' 'கார்காலக்கதை’, 'ஹிம்பலின்' ஆகிய மூன்று முதிர்நிலை நாடகங்களும், துன்பநிலை குறைந்து எல்லாவகை மக்களிடமும் பரந்த அருளும், பெண்டிர் குழந்தைகள் இளைஞர்கள் ஆகியவர்களிடம் ஒத்துணர்வு காட்டுந் தந்தை உள்ளமும் மிகுந்து காணப்படுகின்றன. நாடக அமைப்புச் சற்றுத் தளர்ச்சியுறினும் முன்னிலும் உயர்ந்த இனிய பாட்டியல்கள்

டையிடையே வந்து நாடகங்களிற் படியும் நம் கவனத்தை உயர்வு படுத்துகின்றன. முன்னையிலும் இப்போது அவரிடம் சொற்செறிவு மிகுதி. சில இடங்களில் து அளவுகடந்து மயங்கவைத்தல் என்னும் வழுவிற்கு இடந்தருகின்றது. உரையாடலிலும் காட்சிகள் இணைப்பிலும் க்கடைக் காலத்தின் கைத்திறம் எல்லையற்றது.

அவர் குற்றமாவன, அவர் கையினும் மிகுதியாக உள்ளம் விரைவதும், அமைப்பு முறையில் தற்செருக்காலும், சோம்பலாலும், நேரமின்மையாலும் ஏற்படும் கவனக் குறைகளுமேயாம். இக் குறைகளை மிகைப்படுத்தினர்,பாட்டிலும் உரை நடையின் நேர்மையையும் எளிமை நயத்தையும் வேண்டிய 18ஆம் நூற்றாண்டுக் கவிஞர். அவர்கள் அவரை 'வழுக்கி விழுந்த