120 ||
அப்பாத்துரையம் - 45
வரகவிஞர் எனக் கூறி அவர் பாட்டினியல்பை வியந்து புலமையை ஏளனஞ் செய்தனர்.
(d) ஓய்வுக் காலம்
1609-க்குப் பின் அவர் தாமாக நாடகம் எழுதவில்லை. எழுத வேண்டும் நிலையும் அஞ்ஞான்று இல்லை.1593லிருந்து 1609 வரை 17 ஆண்டுகளுக்குள் அவர் கிட்டத்தட்ட 35 நாடகங்கள் எழுதிக் குவித்தார். அவர் நாடகங்களுக்கிருந்த மதிப்பினால் அடிக்கடி நாடகங்கள் வேண்டு மென்று மக்களும் நாடக அரங்கினருங் கேட்டனர். நாடக மேடையின் வேண்டுகோளுக் கிணங்கியும் அவர் விரைந்து விரைந்து எழுதியுங் கூட, இயற்கை யாற்றலின் வன்மையால் அவருடைய நாடகங்கள் ஒரு சிறிதும் பாட்டியற் செழுமை குன்றாது எழிலுற்றுப் பொலிந்தன. எப்படியும் மனிதர் மனிதர்தானே! பிற்காலத்திற் செல்வநிலை திருந்திய பின், தம்மிலும் இளைஞரான புதிய நாடகாசிரியரை அவர் பழக்கி அவர்கள் கையில் தந்தொழிலை ஒப்புவித்தார். ஷேக்ஸ்பியரிடம் பழகிய இளைய ஆசிரியர் 'ஃபிளெச்சர்' ஆவார். அவருடன் ஷேக்ஸ்பியர் ‘எட்டாம் ஹென்றி', 'பெரிக்ளிஸ்' ஆகிய நாடகங்களை எழுதினார். இவ்விரண்டும் 1609-1610 ஆகிய ஆண்டுகளுக்குரியன.
ஷேக்ஸ்பியருடைய இளமைக் கால நாடகங்களுடனேயே அவர்மீது வென்றியஞ் செல்வி புன்முறுவல் கொண்டாள். 1600க்குப் பின் அவர் பெயரால் அவர் தந்தையின் நிலை உயர்ந்தது. ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எலிஸபெத் அரசியின் கிரீனிச் மாளிகையில் நடிக்கப்பெற்றன.அவர் நாடகக் கழகமாகிய ‘வட்டமாடம்’ அரசியின் முழுத்துணை பெற்றது. 'நடுவேனிற் கன'வில் அவர் எலிஸபெத் அரசியின் கன்னிமையையும், வேறிடங்களில் அவருக்குப் பின் அரசரான முதல் ஜேம்ஸின் தெய்வீக மருத்துவத் திறனையும் எதிர் நோக்காற்றலையும் பற்றிக் குறிப்பறிந்து புகழ்ந்து, அவர்கள் ஆதரவை அடைந்துள்ளனர். 'நான்காம் ஹென்றி நாடகத்தைப் பார்வையிட்டு, ஃபால்ஸ்டாஃபைக் காதலனாகக் காண வேண்டும் என்று முதலாம் ஜேம்ஸ் விரும்பினதற்கிணங்கவே 'வின்ட் ஸாரின் இன் நகைமாதர்' எழுதப்பட்டதாம். அவ்வாறே முதல் ஜேம்ஸ்