124
அப்பாத்துரையம் - 45
‘எனது இளமை முதற்கொண்டே தந்தையார் இடையறா ஊக்கத்துடன் எனக்கு மொழிகளின் அறிவையும் அறிவியல் துறைகளின் அறிவை யும் புகட்டிவந்தார். பள்ளியிலும் வீட்டிலும் எனக்குப் பல ஆசிரியர்கள் பல துறைகளில் பயிற்சி தரும்படி அத் தந்தையார் (இறைவன் அவருக்கு இன்னருள் புரிக) அமர்த்தி யிருந்தனர். உயர்தனிச் செம்மொழிகளில் வல்லவனாக வேண்டுமென்ற விருப்பம் எனக்கும் இருந்தமையினால் நான் முயன்று உழைப்பைப் பன்மடங்காக்கினேன்” என்று அவரே கூறுகிறார்.
பள்ளிப்பயிற்சி முடிந்தபின் மில்ட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்து கல்லூரியில் பயிற்சி பெறச் சென்றார். இக் காலத்தில் மில்ட்டன் இளமையும் வனப்பும் மிக்கவராயும், பொன்மைமிக்க நீண்ட முடி உடையவராயும் இருந்தனராம். அதனுடன் (இத்தகைய வெளி யழகுடன் பொதுப்படையாகக் காணுதற் கரிதான) இறைவன் பற்றும் உடையவரா யிருந்ததனால் உடனொத்த மாணவரிடையே இவர் ‘கிறிஸ்து கல்லூரியின் இளம் பிராட்டி' என நகைத்திறம்பட அழைக்கப்பட்டார்.
இலக்கிய உலகில் பிறக்கும்பொழுதே அவர் இளங்குயிலாகப் பிறந்திருக்க வேண்டும். அதினும் பிற குயில்களைப் போன்ற குயில் அல்லர் இவர். இவர் வேறு இறைப்பணியிலேயே நின்ற நேர்மையுடைய குயில் என்னல் வேண்டும். பொன்னை ஒத்த உயர் அறிவு புதுமலரின் மணத்தை ஒத்த இனிமையுடன் கலந்து, இரண்டும் சேரப் பொன்மலர் நாற்றமுடைய தாயிற்று. விவிலிய நூலின் அருட் பாட்டுப்பகுதி 136-க்கு அவர் செய்த மொழி பெயர்ப்பு, மொழி பெயர்ப்பென்று சொல்ல முடியாதபடி தனி நயமுடையதாயிருப்பது காண்க:-
“மன்னும் எம் இறை இன் அருள் மாறின்றிப் பின்னி நின்றது பேசும் உயிர்களை;
அன்ன தாகலின் அன்னவன் வான்புகழ்
பன்னிப் பன்னிப் பராவுவம் வாரிரே*