பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

Let us with a gladsome mind

Praise the Lord, for He is kind; For His mercies aye endure,

Ever faithful, ever sure.

என்றவாறு காண்க.

125

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இளம் புலவர் (B.A.) பெரும் புலவர் (M.A.) என்ற பட்டங்களைப் பெற்றபின் மில்ட்டன் தம் தந்தையார் அப்போது குடிமாறிய இடமாகிய பக்கிங்ஹாம்ஷயரிலுள்ள ஹார்ட்டனுக்கு வந்தார்.

கவிதையே தமது வாழ்க்கைப் பணி என்பதைக் கல்லூரியிலேயே இவர் உறுதிப்படுத்தியிருக்கவேண்டும்.'கிறிஸ்து பிறந்த நாள் காலைக் கொண்டாட்டம்' (Ode on the morning of Christ's Nativity) என்னும் நடனப் பாட்டு அல்லது கும்மி அங்கே அவர் எழுதியது ஆகும். 'உமது வாழ்க்கையில் நீர் செய்யப் போவது யாது?” என உசாவிய நண்பர் ஒருவர்க்கு எழுதிய கடிதத்தில், “என் நினைப்பா”! அஃது இறவாப் புகழுடைய ஈசனைப் பற்றியது! இதை உன் காதில் மட்டுமே இப்போது கூறுகிறேன். இப்பெரும் பணிக்கென இப்பொழுதே என் இறகுகளை யான் கோதிக் கத்தரித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.

2. கவிதையின் செவ்வி

இக்காலத்தில் இவர் நாட்டுப்புறத்தில் வாழ்ந்தது இவரது கவிதையின் செவ்விக்கு ஒத்ததாகவே இருந்தது. அதற்கேற்ப அவரும் தமது உறைவிடத்தை அழகுபட அமைத்துக் கொண்டனர். இனிய காட்சிகளும் இன்னொலிகளும் இனிய மணமும், மெல்லிய தென்றலும் நறுங்கனிகளும் நிறைந்து அஃது அழகுத் தெய்வத்தின் உறைவிடமோ என்ன விளங்கிற்று.

இக்காலத்தில் இவர் எழுதிய கவிதைகளிலெல்லாம் இத்தென்றல் மணத்தையும் இவ்வின்னிசையையும் காணலாம். இவற்றுள் முதன்மையானது கோமஸ் (Comus) என்பது. இதில் யாழொலிக்கும் இனிமையூட்டும் பாட்டுக்கள் பல உள்ளன. இளைஞர் களியாட்ட உணர்ச்சியை இது நன்கு புலப்படுத்து கின்றது. களிமகன் (L'Allegro), நிறைமகன் (II Pensoroso) என்ற