ஆங்கிலப் புலவர் வரலாறு
127
டச்சு நாட்டிலுள்ள க்ரோட்டியஸ் என்ற பேர்போன வரலாற்றாசிரியரையும் மில்ட்டன் கண்டது இப்பயணத்தின் போதே யாகும்.
மில்ட்டன் இத்தாலி நாட்டிலிருக்கும்போது இங்கிலாந்தில் அரசரது முடியரசுக்கு எதிராகப் பாராளுமன்றத் துரிமையாளர் போர் தொடங்கினர் என்பது கேட்டார். மில்ட் மில்ட்டன் பாராளுமன்றத்தின் மிக முற்போக்கான கட்சித் தலைவரான கிராம்வெலின் நண்பர். எனவே அப்போரில் பங்கு கொள்ள வேண்டுமென விரைந்து தாய்நாடு வந்தார். ஆனால் இவர் படைப்போருள் என்றும் கலந்ததாகத் தெரியவில்லை. அவர் தம் கட்சிக்குச் செய்த துணையெல்லாம்
சொற்போருமே.
கலைப்போரும்
4. அரசியல் வாழ்வும் உரைநடை நூல்களும்
1640 முதல் 1660 வரை இருபதாண்டுகளாக மில்ட்டன் காவியத் தெய்வத்திற்குத் தற்காலிகமாக வணக்கம் செய்துவிட்டு அரசியல் துறையிலேயே ஆழ்ந்து ஈடுபட்டுச் சொற்போர்த் தாள்களும், உரை நூல்களுமே எழுதுவாராயினர். இத்தகைய சிறு நூல்கள் இருபத்தைந்து வரை உள. அவற்றுட் சில அவர் பெயர் தாங்கின. சில புனைபெயரும் சில மறை பெயரும் தாங்கின. இவற்றுள் தலைமை வாய்ந்தது, 'அரியோபகிட்டிகா' என்பது. இது “பேச்சுரிமை” பற்றியது.கிரேக்க நாட்டின் பழந்தலைநகரான அதேன்ஸின் நாட்டாண்மை மன்றமாகிய அரியோப்பகஸின் பெயரடி யாக வந்தது இப்பெயர். இதன் கொள்கை மிக உயரியது. நடைமுறையில் இன்றும் அருமையாய்ப் பேரிலக்காய் நிற்கத்தக்கது. "நிலமாதுக்குப் பொறையாக வாழ்வோர் எத்தனையோ பேர் உளர்; ஆசிரியர் அத்தகையர் அல்லர். அவர்களுடைய வாழ்க்கையின் முதிர்ந்த மணிகளே நல் நூல்கள் ஆகும். உலக வாழ்வின் மிக்கதோர் பெருவாழ்விற்குரிய திறவுகோல்கள் ஆகும் தகுதியுடையவை அவை” என்பது போன்ற பல அரிய நல்லுரைகள் இதில் அடங்கியுள்ளன. இதற்கொப்பான இன்னோர் உரைநடை நூல் கல்வியின் உரிமைபற்றியதாகும். இது தம் புதல்வியர்க்கு அவர் கல்வி கற்பிக்கும்போது எழுந்த நினைவுகளாம்.