3. சாமுவெல் ஜான்ஸன் ஆங்கில இலக்கிய உலகின் விளக்கம் போன்றவர்
1. இளமையும் கல்வியும்
ஆங்கில இலக்கிய உலகில் வல்லுநர் (Doctor) சாமுவெல் ஜான்ஸனின் புகழ் குன்றின்மேலிட்ட விளக்கம்போன்றது. ஆனால், அவரது புகழில் ஒரு புதுமை உண்டு. அவர் புகழ் அவர் எழுதிய நூல்களால் வந்ததன்று; ஏனெனில், இன்று அவருடைய நூல்களெதனையும் எவரும் அவ்வளவாகப் படிப்பதில்லை. ஆனால், அவரைப் பெரிதும் போற்றிய அவர் மாணவர் ஜேம்ஸ் பாஸ்வெல் என்பவரால் எழுதப்பெற்ற அவரது வாழ்க்கை வரலாற்றி னாலேயே அவரது புகழுடம்பு நின்று நிலவுகின்ற தென்னலாம்.
க
ஆனால், ஒரு நூலால் அதன் ஆசிரியருக்குத்தான் புகழ் ஏற்பட வழியுண்டேயன்றி, அந்நூலின் தலைவருக்குப் புகழ் ஏற்படுமா? ஏற்பட்டாலும் அப்புகழ் இலக்கியத் துறை சார்ந்த புகழாகுமா? என்ற கேள்விகள் எழலாம். இதற்கு விடை யாதெனில், ஜேம்ஸ் பாஸ்வெல் எழுதிய நூலின் பெருமை அவர் ஒரு பெரிய எழுத்தாளர் என்பதால் அன்று; அந்நூலுள் சிறந்ததொரு தலைவருடைய வாழ்க்கை விவரங்களும், வாய் மொழிகளும் ஆசிரியர் புனைவோ மறைப்போ திரிபோ எதுவும் இன்றித் தெளிவாகவும் விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளன என்பதே. வாழ்க்கை வரலாற்றுலகில் பாஸ்வெலுக்குக் கிடைத்த உயர் டமெல்லாம் அவரது வரலாறு “அடுத்தது காட்டும் பளிங்கு போல்” இருந்த தென்பதேயாம். இவைபோக அதில் தோன்றிய வனப்பத்தினையும் நூல் தலைவராகிய ஜான்ஸனது வாழ்க்கை வனப்பும், அவரது வாய்மொழிகளின் வனப்பும் சுவையுமேயாம்.