பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

135

ஸாமுவெல் ஜான்ஸன் 1709ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் நாளில் லிச்பீல்டு என்னுமிடத்தில் பிறந்தவர். இவர் குழந்தைப் பொழுதிலேயே “அரசர் பழி” என வழங்கும் நோய்வாய்ப்பட்டுக் கண்ணொளி மழுங்கப் பெற்றார். அந்நாட்களில் ஆங்கில நாட்டில் அரசர் கைதொட்டால் இந்நோய் நீங்கிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. அதன்படியே இவரும் மூன்றாண்டு நடக்கையில் (அல்லது முப்பதாவது திங்களில்) லிச்பீல்டிலிருந்து லண்டன் வரை எடுத்துச் செல்லப்பட்டு ஆன் அரசியின் கையால் தொடப்பெற்றார். அப்படியும் நோய் நீங்கினபாடில்லை. அதன் அழிவுக் குறிகளால் அவர் முகம் என்றென்றைக்கும் அருவருப்புத் தோற்றமுடைய தாக ஆக்கப்பட்டது.

பள்ளிக்கூட வாழ்க்கையில் ஜான்ஸன் எப்பொழுதும் முதல் இடத்தவராகவே இருந்துவந்தார். பின்நாட்களில் அவரது ஒப்புயர்வற்ற திருந்திய இலத்தீன் அறிவு எப்படி ஏற்பட்டதென்று அவரிடம் ஒருவர் கேட்டபோது அவர் “ஆசிரியர் நன்றாக அதை அடித்து ஏற்றினார்” என்றார். இதிலிருந்து அடிக்கும் அறிவுக்கும் பொருத்தமிருந்தது என்று அவர் நினைத்தனர் என்றே எண்ணவேண்டும்.

ஜான்ஸன் நினைவாற்றலும் உழைப்பு வன்மையும் அந்நாளைய மக்களால் வியக்கத்தக்கதாயிருந்தன. ஆயினும், உண்மையில் அவர் உடலியற்கையாலும் பழக்கத்தாலும் சோம்பேறி யென்பதும் தெரிகிறது. தமது இயற்கையான சோம்பற் குணத்திற்கு இடந்தராமல் உடலை வருத்தி உழைத்தே அவர் உயர்நிலையடைந்தனர் என்று நினைக்க அவரது ஊக்கத் தின் அளவு போற்றத்தக்கதே என்பது தெளிவு. அவர் எழுதிய

நூல்களில் ஆராய்ச்சி நூல்கள் மட்டுமே இன்று

வாசிக்கப்படுகின்றன. ஆயினும், அவர் தம் ஏழைமை நிலையில் தற்காலிக அறிவுரைகளான நூல்களும் செய்தித்தாள் கட்டுரைகளும் எண்ணற்றவை எழுதிக் குவித்துள்ளார்.

2. கொடிது கொடிது வறுமை கொடிது

இளமையிலேயே ஜான்சனது வாழ்வு கடுமையுடையதாய், வறுமை மிக்கதாய் இருந்தது. ஆனால் வறுமை அவரது முயற்சியை மிகுதிப்படுத்திய தேயன்றி, அவரது உறுதியை