பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(136) ||.

அப்பாத்துரையம் - 45

முறித்ததே கிடையாது. வறிஞரிடைப் பொதுப்படையாகக் காணமுடியாத திண்மையும் தன்னாண்மையும் அவரிடம் இருந்தன. ஒருகால் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் அவர் பயிலும்போது வறுமை காரணமாகக் காலணி (செருப்பு)கள் கிழிந்து விரல்களெல்லாம் வெளியே தெரிவது கண்டு பரிவுற்ற நண்பர் சிலர் புதிய காலணி இணை ஒன்று வாங்கி அவர் அறைப்பக்கம் போட்டு வைத்தனர். அதைக் கண்ணுற்றதும் அவருக்கு அது பெரிய அவமதிப்பாகப் பட்டது. அவர் அதனை உடனே எடுத்துத் தொலைவில் எறிந்துவிட்டுப் பழங்

காலணிகளுடனேயே காலங்கழித்தாராம்.

"கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது வறுமையிற் செம்மை”

அன்றோ! அத்தகைய கொடிய வறுமை யென்னும் பாலையினும், தூய்மை மிக்க சுனை நீரூற்றின் செம்மையைப் பேணிய பெரியாரான ஜான்சனை உலகு போற்றுவதில் வியப்பென்ன?

ஜான்சன் தந்தை ஒரு புத்தகக் கடை வைத்திருந்தவர். அவரது வருவாய் மிகக் குறைவு. அதன் மூலம் மிகவும் அருமையாகவே ஜான்சன் தமது பல்கலைக்கழகச் செலவுகளைச் செய்துவந்தார். அப்படியும் கடைசியில் தேர்வுக்கான தொகையைக் கொடுக்க முடியாது படித்த படிப்பின் பயனாக எண்ணப்படும் பட்டம் வாங்காமலே அவர் தம் இடத்துக்கு மீண்டும் வர நேர்ந்தது.

தமது ஊரில் ஜான்ஸன் ஒரு பள்ளிக்கூடம் நிறுவ எண்ணி இரவு பகலாய் உழைத்தார். இதில் அவர் வெற்றிகாணவில்லை அவருடைய மாணவர்கள் அவர் அறிவின் பெருமையை அறிந்திருக்க முடியாது. அவர் நற்குணமோ எனில், அவர்களது கேலிக்கு இடந்தருவதாக மட்டும் இருந்தது. ஜான்ஸனது பாரிய அருவருப்புள்ள உருவமும் நடையும் எளிய உளமும் அவர்கள் நகைக்கு விருந்தாய் உதவின. அவரிடம் இக்காலத்தில் படித்த எளிய மாணவருள் ஒருவர் டேவிட் காரிக்கு ஆவர். ஜான்ஸன் இலண்டனுக்குப் போகும்போது கூடவே போய் என்றும் அவருடன் தோழராயிருந்தவருள் இவரும் ஒருவர். இலக்கிய