ஆங்கிலப் புலவர் வரலாறு
137
உலகில் ஜான்ஸன் அடைந்த உயர்நிலையை இவரும் நடிகர் உலகில் அடைந்து ஷேக்ஸ்பியர் நாடகங் களுக்குப் புத்துயிர் ஊட்டிய நடிகர் அரசு ஆயினர்.
3. ஒழுக்க நிலை
ஜான்ஸனது வாழ்க்கையில் ஒழுக்கமும் நடுநிலையும் அன்பும் உயர் வீரமும் ஒருங்கே செறிந்து விளங்குகின்றன. அவர் தாய் தந்தையரிடத்தில் காட்டிய பற்று நம் நாட்டுக் கதைகளில் காண்பதைவிட உருக்கந் தரத்தக்கது ஆகும். தாயின் சில கடன்களுக்கும் அவர் இறுதிக் கடன் ஆற்றும் செலவிற்கும் ஆக அவர் ஒரே வாரத்துக்குள்ளாக எழுதிய அறிவுக்கதை நூல் (Philosophic novel) ராஸ்ஸலஸ் (Rasselas) என்பது. இதனால் அவருக்கு நூறு பொன்கள் கிடைத்தன. இந்நூலின் துறையில் அஃதாவது ஆய்வியல் புனைகதையில் (Philosophical novel) இஃது இன்னும் சிறப்பு மிக்கதெனவே கருதப்படுகிறது.
இறைவனை யன்றி வேறெவருக்கும் இவர் நல்லவராய் நடக்க முயன்றவர் அல்லர். அவர் முதியவரான பின்னர் நிகழ்ந்த வியக்கத்தகும் செய்தி ஒன்று உளது. ஒருகால் ஸ்டாஃபோர்டுஷய (Stafford shire)ரிலுள்ள உட்டாக்ஸ்டர் (Uttoxter) என்ற நகரின் சந்தையிடத்தில் அவர் தலையில் குல்லாவும் காலுக்குக் காலணியும் இல்லாமல் மழையில் நனைந்து கொண்டு கடவுளை வணங்குபவர் போன்று நின்றனராம். சந்தைக்குச் செல்லும் ஆடவர், மாதர் முதலிய பலரும் இதனைக் கண்டு வியந்து கூடினர். சில சிறுவர்கள் கேலியும் செய்தனர். ஆனால், அவர் அங்ஙனமே வாளா நின்றுவிட்டுச் சில நாழிகை சென்றபின் யாரிடமும் யாதும் கூறாமல் தம் வழியே போயினர். தாம் இங்ஙனம் நின்ற காரணத்தை அவர் யாரிடமும் கூறவில்லை. ஆனால், ஒரு நாள் தற்செயலாகப் பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்யவேண்டும் கடமைகளைப்பற்றிப் பேசுகையில் அவர் காரணத்தை வெளியிட்டுக் கூறினார். "பொதுப்படையாக நான் என் கடமைகளில் தவறியதாகச் சொல்ல முடியாது. ஆயினும், ஒரே ஒரு தடவை மட்டும் ஆணை மீறியதுண்டு. உட்டாக்ஸ்டர் சந்தைக்குப் போக என் தந்தையார் விரும்பியபோது அவர் கூடச் செல்லமாட்டேன் என்று நான் மறுத்துவிட்டேன். இதற்குக்