138) ||
அப்பாத்துரையம் - 45
காரணம் தற்பெருமையேயாகும். பெரிய மனிதனான பின் அச்சந்தைப் பக்கம் போனபோது எனக்கு இந்த நினைவு வந்தது. உடனே எனது தவற்றை உணர்ந்து வருந்தினேன். அதற்கான கழுவாய் அதே இடத்தில் தற்பெருமை இழந்து வருந்துவதே என்று நினைத்தேன். அவ்விடம் மழை பெய்து சேறாகக் கிடக்கும் நாள் பார்த்து நான் அங்கே சென்று தலையணியும் காலணியும் இன்றி நின்று அத் தற்பெருமையை அடக்கினேன். ஆணைமீறியதால் ஏற்பட்ட குற்றம் இத்தகைய ஒறுப்பால் நீங்கி யிருக்கும் என்று எண்ணுகிறேன்” என்று அவர் கூறுகிறார்.
ய
நாடகங்களுள் காணும் தந்தை யன்பு, ஒழுக்கம் முதலியவற்றிற்கும் இதற்கும் எவ்வளவு தொலை பாருங்கள்!
4. மணமும் லண்டன் வாழ்வும்
ஜான்ஸன் 1735இல் திருவாட்டி போர்ட்டர் என்ற கைம்பெண்ணை மணந்துகொண்டார். அப்போது அவருக்கு இருபத்தாறு ஆண்டு. அவர் மனைவி அவரினும் இருபதாண்டு மூத்தவர். இவ்வளவு ஆண்டு வேற்றுமை யிருந்தும் இம்மணவாழ்வில் எத்தகைய குறைபாடும் இல்லாததும், அவருடைய வறுமையும் கடுமையும் மிக்க வாழ்வில் அது வெண்ணில வெனத் தூய அமைதியை யன்றி வேறெத்தகைய மாறுதலும் செய்ய வில்லை என்பதும் கவனிக்கத்தக்கவை.
யாம் மேலே குறிப்பிட்டபடி டேவிட் காரிக்குடன் ஜான்ஸன் லண்டனுக்கு 1737 இல் மணமான இரண்டாண்டு களின் பின் சென்றார். அது முதல் இறுதி வரை அவர் வாழ்க்கையும் இலக்கிய உழைப்பும் எல்லாம் இந்த லண்டன் நகருக்குள்ளேயேயாகும். (லண்டன் நகருக்குள்ளேயே பிறந்து வாழ்ந்த புலவரும், லண்டன் நகரையே தமது உலகமாகக் கொண்டு போற்றிய புலவரும் பலர் உளர் என்பது ஈண்டுக் குறிக்கத்தக்கது.) லண்டன் நகரையும் அதில் வாழும் மக்களின் வாழ்வையும் ஜான்ஸன் அறிந்த அளவு எவரும் அறிந்திருக்க முடியாது. அங்கே அவர் மிக இழிந்த விடுதிகள் முதல், அரசரும் நுழைவு பெற விரும்பும் உயர் இடங்கள் வரை எல்லாவகை வாழ்க்கைகளிலும் ஈடுபட்டிருந்தார் என்பது அவரது வரலாற்றினால் விளங்கும். பின் நாட்களில் “லண்டன்” என்ற