ஆங்கிலப் புலவர் வரலாறு
141
ஜான்ஸன் தமது தோற்றம் அருவருப்பானது என்பதை யுணர்ந்து தம் நண்பர்களையன்றி வேறு யாருடனும் மிகுதி கலப்பதில்லை. முன் நாட்களில் இதனுடன் ஏழைமையை மறைக்கும் விருப்பமும் சேர்ந்திருந்தது. பலகால் குடிக்கூலி கொடுக்க முடியாமல் தங்க இடமின்றி இரவு முழுமையும் தெருக்களில் வந்து திரிந்து கழித்தார். அக்காலத்தில் ஸாவேஜ் என்ற ஒரு நண்பர் அவர் வறுமையை அவருடன் பகிர்ந்து துய்க்கும் தோழராயிருந்தார். இக்காலத்தில் அவரது வரும்படி ஒரு கிழமைக்கு ஒரு பெரும்பொன் (Guinea) ஆகும்.ஓர் அரைப்பணம் கூட (half-crown) அவருக்கு இப்போது குதிரைக் கொம்பு போன்றிருந்தது.
தமது 29 ஆம் ஆண்டில் இவர் இன்னும் ஒரு தடவை ஆசிரியத் தொழிலுக்குப் போக எண்ணினார். நாட்டுப்புறத்தில் திங்களொன்றுக்கு 60 பொன் ஊதியத்தில் அல்லது அதனிலும் கூடக் குறைவாக ஓர் ஆசிரியர் நிலை கிடைத்தால் நல்லதென்று அவர் மிகவும் முயன்றார். ஆனால், அவருக்கு நற்பேறில்லாமை யாலும், ஆங்கில இலக்கிய உலகிற்கு நற்பேறிருந்தமையாலும் அஃது கிட்டவில்லை.
செல்வச் செருக்கும் உயர்குடிமைச் செருக்கும் மிக்க லண்டன் மாது ஒருத்தி முதலில் அவரை அவமதித்துக் கடுமையுட்படுத்தினார்; அதனால் மனக் கசப்போ மனமுறிவோ அடையாது மீண்டும் முயலும் அவர் ஊக்கத்தையும் மாறாப் பற்றையும் கண்டு அவள் அவரைக் கைதூக்கித் தன் உகந்த கணவனாகப் பின் ஏற்றுக்கொண்டார். அவரே யாம் மேற் குறிப்பிட்ட திருவாட்டி போர்ட்டர் ஆவார்.
வழக்கம்போல் ஜான்ஸன் ஒருநாள் விடுதியில் திரை மறைவில் (பிறர் பார்வையிற்படாமல்) இருந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஜான்ஸன் கட்டுரைகளுக்கு உயிர்தந்த ‘நன்மக்கள் வெளியீட்டின்' உரிமை யாளரான திரு. கேவ் ஒரு நண்பருடன் உண்டியருந்துவாராயினர். அந் நண்பர் கேவின் செய்தித்தாளைப்பற்றிப் பேசுகையில் அதில் ஜான்ஸன் என்பார் எழுதிய கட்டுரைகள் மிகவும் செம்மையுடையவை எனப் பலவாறாகப் புகழ்ந்தார். ஈன்ற துன்ப மனைத்தையும் குழவி முகம்