அப்பாத்துரையம் - 45
(142) || கண்டவுடன் மறக்கும் தாய் போலத் தம் நூலின் புகழ் கேட்டு அன்று அவர் தம் வறுமை எல்லாம் மறந்து ஒரு வயிற்றுக்கு இரு வயிறு உணவு அருந்தினர் என்று கேவ் அதே நண்பரிடம் மற்றொரு சமயம் கூறினராம்.
6. ஜான்ஸனும் செஸ்டர்ஃபீல்டும்
ஜான்ஸனது தற்காப்பையும் தன்னாண்மையையும் விளக்கும் இன்னொரு பேர்போன வரலாறு உளது. தாம் வறுமையுற்ற நாட்களில் தம் நூல்களை வெளியிட உதவும்படி அடிக்கடி செஸ்டர்ஃபீல்டு பெரு மகனாரை அவர் அடுத்ததுண்டு. ஆனால், அவர் ஜான்ஸன் பக்கம் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. பின் நாளில் ஜான்ஸன் பெயர் எங்கும் புகழ்க் கதிர்வீசி ஒளிவிடும் காலங்களில் அதே செஸ்டர்ஃபீல்டு பெருமகனார் அவர் எழுதிவரும் பெரு நூலாகிய “அகரவரிசை”க்கு முன்னுரை தந்துதவ முனைந்து வந்தார். ஜான்ஸன் இதனை ஆசிரியத் தொழிலுக்கும் இலக்கியத் துறைக்கும் செய்த அவமதிப்பு என மனத்துட்கொண்டு தம் முழு வன்மை யுடனும், ஆனால் பெருந்தன்மை யிழவாமல், தம் மறுப்பையும் ஏளனத்தையும் அவர் மீது வீசினார். இவ் அமயம் அவர் எழுதிய கடிதம் ஆங்கில இலக்கியத்திலேயே தனிச் சிறப்புற்றதோர் கடிதமாய் விளங்குகிறது. இக் கடிதம் வருமாறு:-
"துரையவர்களே! வள்ளல்களாவோர், ஒருவன் நீரில் கிடந்து தத்தளிக்கும்போது பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவன் கரையேறப் போவதைப் பார்த்து அவனுயிரைக் காப்பாற்ற விரைபவர் தாமா?
தங்களுக்கு ஏற்பட்ட கடைக்கண் பார்வை முன்னால் ஏற்பட்டிருந்தால் அது கருணையின்பாற்பட்டிருக்கும்; என் ஆவல் கசப்பாக மாறி அப் பார்வையால் நான் மகிழ்வடைய முடியாத நிலை வந்தபின்தான் அது தங்களால் அருளப்படுகிறது. புகழுக்காக நான் தங்கள் துணையை வேண்டினேன்; புகழின் பிடி எட்டியபின் தங்கள் துணை எதற்கு? நன்மையைச் செய்யும் தகுதியில்லாத இடத்து நன்மையைப் பெற்று நன்றி செலுத்து வானேன்? வள்ளல்கள் துணையின்றியே வெற்றியடையும்படி