பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

143

கடவுள் என்னை விட்டிருக்கவும் அவ்வெற்றியை நான் வள்ளல்களுக்குக் கொடையாக வழங்குவ தெப்படி?

ஒன்றுமற்ற நிலையில் துணையின்றிப் பிழைத்த யான் அரைகுறை யான வெற்றியேனும் கிடைத்தபின் பிறர் துணையை நாடிப் பெரும்புகழ் பெறுவதைவிடப் பிறர் துணையின்றிச் சிறுபுகழ் பெறுவதே பெரிதெனக் கருதுவேன்.”

கல்வியின் பெருமையையும் கல்வியின் பெருமையை மதியாத செல்வத்தின் சிறுமையையும் இக் கடிதம் திறமும் நயமும்பட எடுத்துக் காட்டுகின்றது.

7. கபிலரை ஒத்த அருளாளர்

பிறர் துணையின்றி வறுமைப் பேயுடன் போராடும் நிலையிலும் ஜான்ஸன் பிற ஏழைமக்களிடமும் தம்மைப் போன்ற புலவரிடமும் பற்றும் மதிப்பும் வைத்து அவர்களுக்குத் தம்மாலான உதவியனைத்தையும் நாக்கடிப்பாக வாய்ப்பறை யறையாது செயல் முறையிலேயே செய்பவர். இவ்வகையில் இவரைச் சங்ககாலத்து வாழ்ந்த தமிழ்ப் புலவர் பெருமானாகிய பொய்யாநாவிற் கபிலருடன் ஒப்பிடலாகும்.

ஜான்ஸன் காலத்திருந்த புலவருள் அவருக்கிணையான புலவர் கோல்டுஸ்மித் ஆவர். இவரும் ஜான்ஸனைப் போன்று வறுமையிலேயே கிடந்துழன்றவர். ஜான்ஸனைப்போலவே பரிவும் இரக்கமும் பிறர்க்குதவி செய்யும் குணமும் படைத்தவர். ஆனால், ஜான்ஸனுக்கிருந்த உலகியல் அறிவும் ஆற்றலும் பொருள்வகைத் திறமும் அவரிடம் கிடையாது. கையில் பணம் இருந்தால் நெஞ்சகத்து வஞ்சகமின்றி நலிந்தோருக்கும் நண்பர் களுக்கும் ஈந்து தாமும் ஐம்புலனாரத் துய்ப்பார். இல்லாதபோது கையால் வயிற்றைப் பிசைந்துகொண்டு கலங்கி நிற்பார்.

ஒருகால் வரிபிரிப்போன் வரிவாங்கியே தீருவதென அவர் வாயிலில் காவலிருந்துவிட்டான். கோல்டுஸ்மித்துக்குக் கையில் பணம் இல்லை. வீட்டிலோ உண்ண உணவுகூட இல்லை. நாள் முழுவதும் வீட்டினுள் பட்டினி கிடந்தார். ஜான்ஸனிடம் போய்க் கேட்கலாம் என்றாலோ காலனைப்போல் நிற்கிறான் வரிகாரன். இந்நிலையில் ஒரு துண்டை எழுதி அனுப்பினர். ஜான்ஸன்