(144) ||.
அப்பாத்துரையம் - 45
தம்மிடம் இருந்த பொற்காசைக் கொடுத்தனுப்பி விட்டு, ஆனமட்டும் விரைவில் தாமும் வந்தனர். வந்து வரிப் பணத்தையும் வேறு கடன்களையும் தாமே ஏற்று அதற்கீடாகக் கோல்டுஸ்மித் எழுதி எறிந்திருந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு போய்த் தமக்கு அறிமுகமான புத்தகவெளியீட்டாள் ரொருவரிடம் கொடுத்து 60 பொன் வாங்கித் தந்தார். இக்கதை இன்று ஆங்கிலேயர் எத்தனை தடவை வாசித்தும் நிறை வடையாப் புனைவு மணியாகிய “வைக்கர் ஆப் வேக்பீல்டு” என்பதாம்! என்னே புலவர் வறுமை! என்னே புலவர் பெருமை!!
இன்னொரு நாள் இரவு நெடுநேரமானபின் ஜான்ஸன் தம் உறைவிடத்திற்குத் திரும்பி வரும்போது வழியில் நடுத்தெருவில் ஓர் ஏழை மாது விழுந்து கிடப்பது கண்டு அவளை முதுகில் தூக்கிக்கொண்டு வந்து, உணர்வு வருத்தி, உணவு கொடுத்ததுடன் அவளுக்கு வேறு துணை யில்லாதது கண்டு நெடுநாள் தம் செலவில் உதவி செய்தும் வந்தார்.
உ
ய
பிறர் வருந்தப் பாரா இப்பெரியாருக்குத் தம் வகையிலும் வருத்தங்கள் இல்லாமல் இல்லை. ஒரு தடவை அவருடைய கடன்கள் குவிந்து அவர் கடன்காரர்கள் கையில் சிக்கி ஒரே நாளில் இரு தடவை சிறை சென்றார். இரு தடவையும் நண்பர் சிலர் உதவியால் மீட்கப்பட்டார். ஊர்ப் பிள்ளைகள் தலையில் எண்ணெய் வார்த்து வளர்ப்பவர் பிள்ளைகளை வளர்க்க, இறைவன் ஒருவன் உளன் அன்றோ?
8. அகர வரிசை
ஆங்கில மொழியில் முதல் முதல் ‘அகர வரிசை' ஏற்பட்டதன் முழுப் பெருமையும் ஜான்ஸனையே சாரும். இதனை அவர் ஏழாண்டில் செய்து முடித்தார். இதில் அவர் காட்டிய விடாமுயற்சி அவரது வறுமையை என்றென்றைக்கும் மீட்டு வராதபடி அடித்துத் துரத்தியது. பிற நாடுகளில் அரசியலார் எண்ணற்ற பொருட்செலவில் எத்தனையோ ஆண்டுகள், எத்தனையோ புலவர்கள், எழுத்தாளர், படியாளர் முதலியோரது கூட்டு முயற்சியாலும், கழகங்களின் முயற்சியாலும் செய்து முடிக்கும் இந்நூலை, அவர் தனிமையாக ஏழே ஆண்டுகளில் உழைத்து வெற்றி பெற்றது கேட்டதும் ஆங்கில மக்கள்