ஆங்கிலப் புலவர் வரலாறு
147
தம்முடைய மாணவராக ஏற்றுக்கொண்டு அவரிடம் மிகுந்த நட்புறவு கொண்டார்.
ஜான்ஸனின் புகழ் முதலில் பொது மக்களிடையேதான் பரவியது. விரைவில் ஆங்கில நாட்டுக் கல்லூரிகள் வரையிலும் அரசர் வரையிலும் அஃது எட்டிற்று. டப்லினிலுள்ள மூவிறைக் கல்லூரி (Trinity College) அவருக்குச் சட்ட வல்லுநர் (Doctor of Laws) என்ற பட்டம் நல்கிற்று. ஆங்கில நாட்டரசராகிய மூன்றாம் ஜார்ஜ் அவருக்கு ஆண்டுக்கு 300 பொன் உதவிச் சம்பளமாகக் கொடுத்ததுடன் நேரடியாக அவருக்குப் பேட்டியளித்து அவரை நன்கு மதித்தனர். அவரது 66ஆம் ஆண்டில் ஆக்ஸ் போர்டு பல்கலைக் கழகமும் அவருக்குச் சட்ட வல்லுநர் பட்டம் தந்தது. ஜான்ஸன் எழுதிய நூல்களுள் இன்றும் இறவாப் புகழுடையது அவரது ‘புலவர் வரலாறுகள்' ஆகும். இதில் அவர் நண்பராகிய ஸாவேஜியின் வரலாறு முதலில் எழுதப்பெற்றது. பின் மில்ட்டன் முதல் தொடங்கித் தம் காலத்துக்குமுன் இருந்த டிரைடன், போப் முதலியோர் வரலாறுகள் வரை ஆராயப்பட்டன.
11. வடநாட்டுப் பயணம்
முதுமையில் ஜான்ஸன் ஸ்காத்லாந்தின் வட பகுதிகளைப் பார்க்க எண்ணிப் பாஸ்வெலுடன் சென்றார். பயணத்தைப் பற்றிப் பாஸ்வெல் 'ஹெப்ரிடீஸ் பயணங்கள்' என்றொரு சுவைதரும் நூல் எழுதியுள்ளார்.
இப்பயணத்தில் வடநாட்டின் பல பெருமக்கள் அவர்களை வரவேற்று நன்கு மதித்தனர். ஆயினும், பல டங்களில் ஏழைகளின் குடிசைகளிலும் தங்க நேர்ந்தது. ஐயோனாவில் அவர் போதிய போர்வைகள் கூட இன்றி, வைக்கோற் சாக்குகளின் இடையே தூங்கநேர்ந்தது. அத்தகைய நேரத்தில் அவர் சற்றும் உறுதி பெயரா
எழுதியுள்ளார்.
ஊக்கத்துடன் இவ்வுயரிய கருத்தை
"சுற்றுச் சார்புகளின் தாக்கிலிருந்து மனத்தைப் பிரித்துத் தனியாக உணர்வதென்பது எளிதில் முடியாதது. அங்ஙனம் முடிந்தால்கூட அஃது அறிவுடைமை ஆவதெங்ஙனம்? புலனறிவின் ஆட்சியினின்றும் விடுபட்டு, முக்காலத்தினும்