பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

||_ _ .

அப்பாத்துரையம் – 45

உண்மையாம் மெய்ந்நிலையை நிகழ் காலமாகிய திரையை விலக்கி அறிவதே மெய் அறிவின் உயர்வு ஆகும். எனினும், இதனால் யானோ, என்னுடைய நண்பர்களோ இவ் அறிவியல் உண்மை ஒன்றனையே கருதிக்கூட உணர்ச்சிகளைப் புறக்கணிக்கா திருப்போமாக. மரதோன் போர்க்களத்திலும் ஐயோனாவின் பழம் பெருமைகளினிடையிலும் நாட்டுப் பற்றின்றித் திரிபவரது அறிவைக் கண்டு யாம் அழுக்காறடைய மாட்டோம்."

இவ்விடத்தில் ஜான்ஸன் ஒன்றுக்கொன்று முரணானவை போல் தோற்றக்கூடும் இரு பேருண்மைகளை நடுநிலையுடன் குறித்துள்ளார். தமது புறநிலைக் கடுமையிலும் இத்தகைய அகநிலை உயர்வு உடைய ஜான்ஸனைப் புகழேந்தியின் சொற்களால் “மெய்த்திரு வந்துற்றாலும் வெந்துயர் வந்துற்றாலும், ஒத்திருக்கும் உள்ளத்து உரவோன்” என்று கூறலாகும் அன்றோ!

சொல்வன்மை இருவகைப்படும். ஒன்று கூட்டங்களில் சொற் பொழிவு நடாத்தும் ஆற்றல், இன்னொன்று நெருங்கிய நண்பரிடையே சமயத்துக்கு ஒத்தபடி பேசி அவர்களுக்கு நல்லுணர்வும் இன்பமும் ஒருங்கே பயக்கும் நுண்ணுரை பகரும் ஆற்றல். பின் கூறிய ஆற்றலிலும் மக்கட்கு இலக்கிய மாக விளங்கும் உயர்குணமுடைமையிலும் உலக இலக்கியத்திலேயே ஜான்ஸன் முதல்வராக எண்ணப்படு கிறார்.