பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

அப்பாத்துரையம் - 45

சிறுவராயிருக்கும்போது அவர் நோயால் அடிக்கடித் துன்ப மடைந்தார். அதோடு பிறவியிலேயே அவர் கால் சற்று நாண்டி என்றும் தோற்றுகிறது. ஸ்காட்டின் புகழ் பெருகுந்தோறும் இச்சிறு குறைபாடும் மிகைபடுத்தப்பட்டுக் கொண்டே வந்தது. இறுதியில் இஃது அவர் நடக்கமுடியாத நொண்டி என்றும், நலிந்த உடல் உடையவர் என்றும் ஒரு தப்பெண்ணத்தைப் பொதுமக்கள் உள்ளத்தில் ஏற்படுத்தியது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். அவர் நாள்தோறும் முப்பது கல் எளிதாக நடக்கக் கூடியவர். குதிரை யேற்றம், வேட்டையாடல் ஆகியவற்றில் அவருக்கிருந்த பற்றுதலும், திறனும் மிகுதி. மேலும் சிலம்ப முதலிய பழங்காலப் பயிற்சி முறைகளிலும், களியாட்டங்களிலும் அவர் ஊக்கங் கொண்டவர் என்பதை யும் ஓர்தல் வேண்டும்.

2. இளமை

இளமையிற் கண்ட நோய் அவருக்கு ஒரு பெரிய நன்மையைத் தந்தது. திறந்த வெளியும் தூய காற்றும் அவர் உடலுக்கு நலமாயிருக்குமென மருத்துவர் கூறினதால், அவர் நாட்டுப்புறத்தில் ஸாண்டி நோ என்ற அவருடைய பாட்டனார் இல்லத்துக்கு அனுப்பப்பட்டார். இவ்விடத்திலிருந்து அவர் எளிதில் மலை, கானாறு, அருவி, கடற்கரை முதலிய இயற்கைக் காட்சிகளை நேரில் சென்று காணமுடிந்தது. ஸ்காத்லாந்து, இங்கிலாந்து இவற்றினிடைப்பட்ட நாட்டின் மக்கள், மக்கள் வாழ்வு, நில இயல்பு, உயிர் இயல்பு ஆகிய அனைத்தையும் உண்மையும், உவப்பும் ஒருங்கே அமையும்படி வரைந்து இலக்கிய உலகிடையே அவற்றுக்கோர் இறவா உரு அளித்தவர் இவரே.

ஸாண்டி நோவில் நரைத்த ஒரு முதிய மாட்டிடையர் ஒருவர் இவருக்குப் பழக்கமானார். இவர் வாய்மொழி மூலமாகவே ஸ்காட் தம் நாட்டில் வழங்கும் பல பழங்கதைகளையும், நாடோடிப் பாட்டுக்களையும் கேட்டார். குழந்தையாயிருக்கும்போதே ஸ்காட்டுக்குப் பழம் பொருட் பற்றும், புனைவியல் ஆற்றலும் மிகுதியாய் இருந்தது. ஆகவே, இக்கதைகள் அவர் மனத்தில் ஆழ்ந்து பதிந்ததுடன் கருப்பொருள் நிறைந்து மழையால் நனைந்து பதமான நிலத்தில் ட்ட, முற்றிக்காய்ந்த விதைகள் போன்று விரைவில் முளைத்து