பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

153

இலக்கிய மொன்றையே தம் முழுப்பணியாகக் கொள்ள முடிந்தது.

1797 கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அவர் சார்லட்டி கார்ப் பெண்டர் என்ற மாதைக் காதலித்தார். முதல் முதலில் கில்ஸ்லன்டு என்னும் சிற்றூரில் வைத்துக் குதிரைமீது அவர் ஊர்ந்து செல்லும்போது அவ் அம்மையார் எதிரே வருவது கண்டார். அதன்பின் அதே இரவில் எதிர் பாராத முறையில் ஒரு நடனக் கூட்டத்தில் இருவரும் கலந்து ஒருவரை யொருவர் மீண்டும் கண்ணுற்றுக் காதல் கொண்டனர். மறுநாள் இரவு ஸ்காட் அவரைக் குறித்தே ஓயாது பேசிக்கொண்டிருந்து இரவு ஒரு மணிவரைத் தூங்கா திருந்தனர் என்று ஒரு நண்பர் கூறியுள்ளார். மணமானபின் இருவரும் சிறிது காலம் எடின்பரில் வாழ்ந்தனர். அதன்பின் எஸ்க் (Esk) ஆற்றின் கரையில் லாஸ்ஸவேடு (Lassawade) என்னுமிடத்தில் ஒரு குடில் கட்டி வாழ்ந்தனர்.

நட்பும் பிறர்க்கு உதவுதலும் அவர் வாழ்க்கையின் ஆழ்ந்த குறிக்கோள்கள். உண்மையில் இவ்வுயர் குணங்களே அவர் வாழ்க்கையின் பல இன்னல்களுக்கும் அவர் கடைசிக் கடனுக்கும் காரணமாய் அமைந்தன. அவருடைய இலக்கிய முயற்சிகளில் பெரும்பாலானவை கூடப் பிறரது முன்னேற்றத்தை உன்னி ஏற்பட்டவையேயாகும்.

5. பழம் பாடல்கள்

ன்று ஸ்காட்டின் பெயர் உலகில் உச்சநிலையில் இருப்பது உரை நடைத் துறையில், அதிலும் புனைகதைப் பகுதியிலாயினும், அத்துறையில் அவர் தாமாக முயலவில்லை; அவரது எண்ணமெல்லாம் முதன் முதலில் பழம் பாட்டுக்கள், பழங்கதைகள் ஆகியவற்றைத் தொகுப்பதிலேயே யிருந்தது. இவற்றில் முதல் தொகுதியை அச்சிட்டவர் அவர்தம் பழைய பள்ளித்தோழரான ஜேம்ஸ் பாலன்டைன் (James Ballantyne) ஆவர். இவருக்கு உதவி செய்யும் எண்ணமே இத்துறையில் அவரை ஊக்கிய தென்பது கீழ்வரும் அவரது கடிதத்தால் விளங்கும்.