பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

155

ஆகும். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் புனைகதைகள் எழுதுவோர் ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதிப் பல பகுதிகள் வெளியிடுவது வழக்கம். இங்ஙனமே தாம் சேர்த்த ஸ்காத்லாந்தின் பழங்கதைகள், பழைய வரலாற்றுத் துணுக்குகள் ஆகியவைகள் உள்ளடங்கிய ஒரு நீண்ட புனை கதை எழுத வேண்டுமென அவர் நினைத்து அதில் ஒரு பகுதி எழுதி முடித்தார். அதன்பின் எக்காரணத்தாலோ அதை மறந்து விட்டார். அது பெட்டியினடியில் புதையுண்டு ஒன்பது ஆண்டுகள் கிடந்தது. ஒரு நாள் மீன்தூண்டிலின் கொக்கி ஒன்றைத் தேடுகையில் அது தற்செயலாகத் தென்பட்டது. அதனை ஏன் முடித்துவிடக் கூடாது என்ற புதுமையான ஓர் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. அவ் ஆர்வத்தில் ஒரே யடியாய் உட்கார்ந்து மீதி இரண்டு பகுதிகளையும் மூன்று வாரங்களுக்குள் முடித்துவிட்டார்.

இந்நூலை வெளியிடுகையில் ஸ்காட் தாம் ஆசிரியர் என்று தெரியாமலிருக்க எத்தனையோ முயற்சிகள் எடுத்துக் கொண்டார்.ஆசிரியர் கையெழுத்துத் தெரியாமல் வேறொருவர் கையால் படியெடுக்கப் பட்டது. நூல் வெளிவந்து நற்புகழடைந்த பின்னும் கூட நண்பர்கள் தவிரப் பிறருக்குத் தாம் ஆசிரியர் அல்லர் என்றே கூறிவந்தார். இதற்குக் காரணம் நன்கு விளங்கவில்லை. அதில் வரைந்துள்ள உருக்கள் தம்மைக் குறித்தவை என ஒரு சிலர் நினைக்கக்கூடுமெனத் தாம் அஞ்சினதாக அவர் கூறுகின்றார்.

இந்நூல் 'வேவர்லி' என்ற பெயரால் வெளிவந்தது. இந்நூலுக்கு மொத்தம் 700 பொன் கொடுக்க வெளியீட்டாளர் இசைந்தனர். ஸ்காட் 1000 பொன் கேட்டனர். வெளியீட்டாளர் அதற்கிணங்காததால் ஊதியத்தில் சரி பகுதி தருவதாக உடன்பட்டனர். இதனால் வெளியீட்டாளருக்குப் பெருத்த ஊதியக் குறைவே ஏற்பட்டதென்று சொல்ல வேண்டுவதில்லை.

இந்நூல் வெளிவந்தபோது ஸ்காட்டின் ஆண்டு 43. அதன் பின் 17 ஆண்டுகள் அவர் வாழ்ந்தனர். அதற்குள் அவர் எழுதிக் குவித்த புனை கதைகள் எண்ணில. வை பெரும்பாலும்

டைநாடு, ஸ்காத்லாந்து, இங்கிலாந்து ஆகியவற்றின் வாழ்க்கையைப் பற்றியவையும், பழைய வரலாற்றை