ஆங்கிலப் புலவர் வரலாறு
161
நல்லுணவின்றி வழியில் வாங்கிய உலர்ந்த அப்பம் ஒன்றைத் தின்ன நேர்ந்தது. அதன் பின் வழியிலுள்ள ஒரு சிற்றுண்டிச்சாலை சென்று ஒரு கோப்பை இனிய நறவு கொடுக்கும்படி கேட்டார். அந்நாள் அவர் குல்லாயின் உச்சிகூட அங்கிருந்த மேசையளவு எட்டவில்லை யாயினும், அவர் பெரிய மனிதரிடங் காணமுடியாத அளவு நயத்துடன் பேசியது கேட்டு விடுதிக்காரர் தம் மனைவியை யழைத்து அவரை உள்ளே வரும்படி கூறி, உணவும் நறவும் வழங்கும்படி சொன்னார். அம்மாதும் அவரது நாகரிகத் தோற்றங்கண்டு மகிழ்வுற்று அவருக்கு வேண்டியதை அன்புடன் வழங்கித் தாய் போல் அவரை வாரி எடுத்து உச்சிமோந்து முத்தந் தந்து அனுப்பினாராம்.
இருண்ட இந்நாட்களிலெல்லாம் இதற்குமுன் பள்ளியிற் கழித்த நாட்களின் நினைவு கனவுபோல் அடிக்கடி மனத்தில் இருந்துவந்தது. அவரது மனம் முற்றிலும் கசப்படையாமல் தடுத்தவை முற்கால இன்பம், பிற்காலத் துன்பம் ஆக இரண்டினிடையேயும் உள்ள நாடகச்சுவை யறிவும் நயமுமேயாகும். நேரம் வாய்த்தபோது அவர் உறவினர் நண்பர் ஆகியவர் மகிழத் தில்லானாப் பாடல்கள் பாடுவார்; அல்லது தம்மை ஒத்த சிறுவருடன் விளையாடுவார்.
3. மீட்டும் கல்விச்சாலை
சில நாட்களுக்குப்பின் தாய் தந்தையரின் பொருள்நிலை சற்றுச் சீர்ப்படவே அவர் தொழிற்சாலையிலிருந்து விலகி மறுபடியும் பள்ளியிற் சேர்ந்தார். இந்நாள் அவர் படித்த பள்ளி அமைந்துள்ள இடத்தை இன்றும் எளிதிற் காணலாம். அப்பள்ளிக்கூடம் ஹாம்ப்ஸ்டெட் ரோடில் கிரான்பித் தெருவில் இருந்தது. அதற்கு அருகில் ஸாமர்ஸ் டெளனில் ஜான்ஸன் தெருவில் அவரும் அவருடைய தாய் தந்தையரும் தங்கிய வீடு இப்போது ஏழைகளுக்குக் கல்வி நிலையமாக விளங்குகிறது.
தொழிற்சாலை வாழ்வுக்குப்பின் பொன் நகர் வாழ்வே என்று தோற்றத்தக்க இப்பள்ளி வாழ்வு ஈராண்டுகள் நடைபெற்றது.இந்நாளில் தான் அவர் சிறு கதைகள் எழுதுதல், சிறுவருடன் நாடகம் போடல் முதலிய வகைகளில் தமது பின்னையப் பெரும்பணிக்குத் தம்மைத் தகுதிப்படுத்திக்