பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




162

அப்பாத்துரையம் - 45

கொண்டார். பள்ளியில் அவர் விரைவில் மேம்பாடடைந்து 14ஆம் ஆண்டில் வெளி வந்ததும் லிங்கன்ஸ் இன்(Lincohn's Inn) என்ற இடத்தில் நியூஸ்குவயரில் வழக்கறிஞர் நிலையத்து எழுத்தாளர் பணியில் அமர்ந்தார். இக்கீழ்த்தர எழுத்தாளர் பணியில் முதன் முதல் அவருக்கு வாரம் ஒன்றுக்கு பதின்மூன்றரை வெள்ளிகள் (ஷில்லிங்குகள்) வருவாயாக வந்தன.

காண

துன்பத்தின் எல்லை கண்டவர் இன்பத்திற்கடிமையாகிச் சோம்பல் கொள்ளாது இன்பத்திற்கும் எல்லை முயல்வாரன்றோ? அதன்படி டிக்கன்ஸ் தமது எழுத்தாளர் பணியை நிலவரமாகப் பெற்று ஓய்வு கொண்டு விடாமல் சுருக்கெழுத்துப் பயில்வதன் மூலம் விரைவில் முன்வர எண்ணினார். அதன்பின் வழக்கு மன்றங்களில் உழைக்க முயன்று இரண்டாண்டு அத்துறையிலும் ஒழுங்கான வரும்படியின்றிக் கழித்தார். தாம் எதிர்பார்த்த அளவு விரைவில் மேம்பாடு கிட்டாததை எண்ணிச் சோர்வு கொண்டு ஒரு தடவை நாடகத் துறைக்குச் செல்ல நினைத்து விகடராகத் தாமும் தமைக்கையும் செல்லக் கூட ஏற்பாடு செய்தார். தெய்வம் வேறு வகையில் வாழ்க்கையைத் திருப்ப எண்ணியபடியால் நடைபெறவில்லை போலும்!

4. செய்தித்தாள்களும் இலக்கியப் பணியும்

இது

19ஆம், 21ஆம் ஆண்டுகளில் அவர் 'மார்னிங் கிரானிக்கிள்’ முதலிய செய்தித்தாள்களுக்குக் குறிப்பெழுதுவோர் (Reporter) ஆக அமர்ந்தார். இத்துறையிலும் அவர் தம் தொழிலை யாவரும் வியக்கும் வண்ணம் திருத்தமாகச் செய்தார். அந்நாள் கடிதப் போக்குவரத்து குதிரை வண்டிகளிலேயே நடை பெற்றதால், அவர் வழியில் காணுஞ் செய்திகளைக் கூர்ந்து நோக்கிப் பிற்காலப் பணியில் பயன்படுத்தும்படி உள்ளத் தடத்தில் சேகரித்து வைத்துக்கொண்டார்.

இச்சமயம் செய்தித்தாள்களுக்குத் தாமும் எழுத வேண்டுமென்னும் பேராவல் அவருக்கு ஏற்பட்டது. ஆனால், அதற்கான துணிவு இல்லாததால் நேர் பெயருடனன்றிப் புனை பெயருடன் ஒரு சிறுகதை எழுதி அதனை உறையிலிட்டு யாரும் அறியாது மறைவாகச் சென்று ஒரு தபால் பெட்டியிலிட்டனர்.