6. சார்ல்ஸ் லாம்
நல்லியல் வாய்ந்த கட்டுரை மன்னர்
கட்டுரை என்பது எழுதுவோன் கருத்தை அவன் கருதும் முறையும் அவன் உணர்ச்சியுந் தோன்ற உரைக்கும் உரையாம். இவற்றுட் சில உணர்ச்சியை மிகுதி வெளிப்படுத்தாது கருத்தை மட்டுமே வெளிப்படுத்தும். வேறு சில இரண்டையும் ஒருங்கே வெளிப்படுத்தும். இவ்விரண்டு வகைகளுள் பிந்திய வகையே சிறப்புடையதாகக் கொள்ளப்படுகின்றது.
ய
இத்தகைய கட்டுரைகள் எழுதும் ஆசிரியர்களுள் மிகச் சிறந்தவராகக் கருதப்படுபவர் சார்ல்ஸ் லாம். ஆங்கில மொழியில் ஹாஸ்லிட்டும், பிரெஞ்சு மொழியில் மந்தேனும் இவருக்கு அண்மையுடைய பிற கட்டுரை ஆசிரியர்கள். முதற்கூறிய வகைக் கட்டுரையில் சிறப்புக்கொண்டவர் அடிஸன் ஆவர்.
சார்ல்ஸ் லாமின் வாழ்க்கை
கட்டுரைக்கெனவே அமைந்தது என்னலாகும். வாழ்க்கையிலுள்ள பல இன்னல்களும் அவரைப் பண்படுத்தி அவர் வாழ்வை உலகியல் முறையில் குறுக்கி இலக்கிய வகையில் உயர்வுறச் செய்தன. இவ்வின்னல்கள் அவர் பிறரைப்போல் வாழாமல் பண்ணின; ஆனால், பிறர் தமது விரைந்த முன்னேற்ற வாழ்வின் சுழலிற்பட்டுக் காண முடியாத வாழ்வின் அமைதிகளையும் புறநிலைப் பொருள்களில் உளஞ் சென்றவர் கருத்திற்படாத அகநிலைப் போக்குகளின் நுணுக்கங்களையும், அறிவுலகில் ஓடிய உணர்வுடையோர் மேற்போக்கான பார்வையிற் படாத, உணர்ச்சியுலகின் ஆழ்ந்த நுட்பங்களையும் தேடிச் சேர்த்துப் பழவமுது போன்றதும், பழங்கறி போன்றதும், பழந்தேன் போன்றதும், பழமரபுப் போன்றதுமான பழம் புதுச்சுவை ஒன்றை நமக்குத் தந்துள்ளார்.
சார்ல்ஸ் லாம் 1775 பிப்ரவரி மாதம் 10ஆம் நாள் முடிமன்னர் பணியாளர் தெரு(Crown Office Row)வில் பிறந்தவர்.