பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

167

ஏழை நூலாசிரியரும் பெரும்படியாக நூல் வெளியிடுவோரும் வாழும் ப்ளீட் தெரு (குடநநவ ளுவசநநவ) இதன் அருகில்தான் உள்ளது. ஆயினும், அத் தெருவுக்கு மாறாக லாம் பிறந்து வளர்ந்த இத்தெரு அமைதி குடிகொண்டது; பழமை நிலவுவது; பழங் கோயில்களும் வரலாற்றுச் சார்புடைய மாடகூடங்களும் ஊற்றுக்களும், ஆற்றுத் துறைகளும் நிறைந்தது. “ஆற்றுத்துறை என்பது நான் வழங்கும் சொல் ஆயினும், அது பிறர் பார்வைக்கு ஆறன்று; சிற்றோடைதான். ஆனால் என் உணர்ச்சிக்கு முழு இடம் தருவதாயின் அதை ஆறு என்று சொன்னாற் போதாது; ஆறுகளின் அரசு என்னல் வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

சார்ல்ஸ் லாம் 'மடத்துக்கும் மடத்துக்கும் இடையே வாழ்ந்தவர்’ என்று சொல்வதுமுண்டு. அஃதாவது இயற்கையாலும், சுற்றுச் சார்புகளின் தாக்கினாலும் அவர் நாகரிகப் போக்கிலிருந்து விலகி நின்று பழமைப் பட்டுத் தம்மையொத்த பழமையான சுற்றுச் சார்புகளையே விரும்ப லாயினர். அவருடைய உடல் நலிவு, நாவடக்கம் முதலிய குணங்களும் இப் பண்பையே வலியுறுத்தின.

இளமையில் சார்ல்ஸ் லாம் படித்த பள்ளிக்கூடம் புதுவாயில் தெரு (NEW GATE STREET)வில் உள்ள நீலச் சட்டைப் பள்ளிக்கூடம் ஆகும். க்ரே ஃப்ரையர்ஸ்* (சாம்பல் நிறத் தோழர் கழகம்) என்ற சமயக் கழகத்தாரின் மடத்திடையே 1225இல் நிறுவப்பட்டது. பின் அம்மடம் எட்டாம் ஹென்றி யால் அழிக்கப்பட்ட பிறகு ஆறாம் எட்வர்டால் மீண்டும் 1552இல் நிறுவப்பெற்றது. அண்மைக்காலத்தில் 1902இல் இது லாம் படித்த இடத்திலிருந்து ஹார்ஷமுக்கு மாற்றப்பட்டது.

இன்று இப்பள்ளிக்கூடம் இலக்கிய அன்பர்களுக்குக் கண்காட்சி இடமாய் விளங்குகின்றது. இதன் தளம் லாம், காலரிட்ஜ், லே ஹண்ட் முதலியவர்களின் அடிச்சுவடுகள் தோய்ந்த இடம் எனப் போற்றப்படுகிறது. லாம்

ப்பள்ளிக்கூடத்தைப்பற்றி எழுதுகையில், 'உடலுக்கு ஊக்கம் அளிக்கும் குதிரைப் பாய்ச்சல், கரடி யாட்டம் முதலியவற்றுள் அப் பள்ளியைச் சேர்ந்த எங்களுடைய உயர்வு ஒரு புறம்; புதூர் (Newington)ப் பக்கம் புத்தாற்றில் (New River) காலை மாலை என்றின்றி ஆடை என்ற கவலைகூட இல்லாமல் பாடியாடிக்