பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

169

லாமின் உயர்குணத்தை அறியும் வகையில் வாசகர்கள் லாமின் நிலையில் தாம் இருந்ததாக நினைத்துப் பார்ப்பார் களாக! அப்படி இருந்தால் எத்தனை பேர் லாமைப்போல் அப்பொறுப்பைப் பொறுப்பாக மட்டும் கொள்ளாமல் விருப்பாகக்கொண்டு அதிலேயே தம் வாழ்க்கையை முற்றும் படியவைப்பர்? அதிலும் பெண்பாலரான உடன்பிறந்தார் பித்துக் கொண்ட வராய் அரசியல் பித்துவிடுதியில் சேர்க்கப்பட்டு விட்டால் என்ன உடன் பிறப்பானாலும் சனி தொலைந்ததெனத் தள்ளியிருப்பதைத்தானே நாம் உலகிற் காண்கிறோம்! உடன்பிறப்பாருக்கு ஒரு கை கொடுத்து உதவுவது மட்டுமே கடனென நாம் நினைக்கிறோமே யன்றி, உடன் பிறந்தாருக்காக நாம் நம் மனைவாழ்க்கையையும் நம் இன்பங்களையுந் துறந்து அவர்களுக்காகவே வாழ விரும்புவோமா?

இங்ஙனம் வாழ்ந்த தன்னலமறுப்பு

லாமினது

தன்னலமறுப்பு என்றால் போதாது; பெருந்தகைமை என்னல்வேண்டும். ஏனெனில், தன்னல மறுப்பில் பற்றுதலைக் கடமைக்காக மறுப்பது மட்டும் முடியுமன்றிப் பற்றுதலை மாற்றமுடியாது. லாமினிடம் இவ்வுணர்ச்சி தன்னலமறுப்பாக வந்ததன்று; இயற்கையமைப்பாக ஏற்பட்டதேயாகும்.

இவ்வுயர்ந்த பற்றுக்கு மேரி லாமும் தகுதியுடையவரே என்பதில் ஐயமில்லை. பித்தந் தெளிந்தபொழுதெல்லாம் அவர் தம்மைப் பித்து விடுதியினின்றும் மீட்டு வீட்டுக்குடித்தனம் தந்த உடன்பிறந்தார்மீதே தமது முழு அன்பையும் சொரிந்தார். அச்சமயங்களில் அவர் வீட்டுப் பணியை முற்றிலும் சரிவரப் பார்த்து லாமிற்கு உடன்பிறந்தார் மட்டுமல்லர்; அவர் தாய், அவர் நண்பர் ஆகிய எல்லா நிலைகளையும் தம்மகத்தே கொண்டு விளங்கினார். இவ்வளவோடு மட்டும் நின்றுவிட்டால் கூட அவர் பெண்களுள் ஒப்பற்ற மாணிக்கம் என்று கூறுவதில் ஐயமிராது. ஆனால் அவர் இந்நிலையினும் மிக்க உயர்வுடையவர். எழுதும் ஆற்றலில் சார்ல்ஸ் அரியரோ, மேரி அரியரோ என்று எவருங் கூறமுடியாதவண்ணம் அவர் சார்ல்ஸுடன் ஒத்த ஆற்றல் உடையவர். அவ்விருவரும் சேர்ந் தெழுதிய நூல்கள் பல. 'ஷேக்ஸ்பியர் கதைகள்,' 'திருவாட்டி லீஸ்டரின் பள்ளிக்கூடம்,' 'முற்றிலும் புத்தம் புதியவையான