ஆங்கிலப் புலவர் வரலாறு
171
இதனினும் மிக்க, இதற்கிணையாக இல்லது; இதற்கு அண்மையான ஓர் இலக்கிய வாழ்க்கை அகப்படமாட்டாது. எங்கும் நிறைந்து நிற்கும் காற்று இயற்கை யாதலால் நாம் பெரும்பாலும் அதனை நினைப்பதில்லை. அம்மாதிரியே தமக்கு இயற்கை யான இக்குணத்தை லாம் வாயால் சொல்வது மில்லை; மனத்தால் நினைப்பதுமில்லை.
‘சொல்லாம லேபெரியர்; சொல்லிச்செய் வார்சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே-நல்ல
குலாமாலை வேற்கண்ணாய்! கூறுவமை நாடில் பலாமாவைப் பாதிரியைப் பார்'
என்ற பாட்டிற் கூறப்பட்ட மூவகை மனிதருள் மனிதருள் லாம் பலாவைப்போல் சொல்லாமலே செய்யும் பெரியவர் வகையைச் சேர்ந்தவர். இன்று உலகில் சொல்லியும் செய்யாதவர் பலர்; சொல்லிச் செய்பவர்கூட ஒரு சிலரே. இந்நிலையில் லாமின் இயற்கையுயர்வின் மாண்பு இத்தகையதென்பதைக் கூறாமலே குறிப்பாலுணரலாகும்.
கட்டுரைகளின் நயம்
லாமின் கட்டுரைகளில் காணும் நயமும் சுவையும் வாழ்க்கையின் சாறும் ஒருவகையில் அவரது வாணிபக் கழகப் பணிக்கு மாற்றாக ஏற்பட்டதேயாம். விடிந்து பொழுதடையும் வரை ஏடுகளுக்குள் ஓர் ஏடு ஆக, எழுதுகோல்களின் இரைச்சலுள் தானும் ஓர் எழுதுகோலாக, உணர்ச்சியற்ற பேர் இலக்கங்களுள் தானும் ஒரு சிற்றிலக்கமாக உழைத்த அவருக்கு அவ்வப்போது கிடைத்த சிறு ஓய்வு நேரமே வாழும் நேரமாய் அமைந்தது.பிறர் ஆண்டுக்கணக்கில் துய்க்கும் இன்பமனைத்தும் அவர் அந்த நொடிக்கணக்கான நேரத்தில் துய்க்கவேண்டி யிருந்தது. அங்ஙனம் துய்ப்பதற்கும் பிறரது வாழ்க்கையிலுள்ள புறநிலைப் பொருள்கள் எதுவும் அவருக்கில்லை. நண்பர் ஒன்றிரண்டு பேருக்கு மேலில்லை. மனை வாழ்க்கையென்பது உடன்பிறந்தாருக்குச் செய்யும் பணி அளவே. ஆகவே அவரது வேட்கை முற்றிலும் வெளியுலகில் இடமில்லாததால் அகநோக் கிற்று. அவ்வுலகில் அவர் கண்ட செல்வம் புற உலகினும் சிறந்ததாயிருந்தது. புற உலகைவிட அவரது அக உலகு நினைத்த