172
அப்பாத்துரையம் - 45
வேளை நினைத்த நினைத்த
நினைத்த வகையில் அவருக்குத்தோன்றி அவர் குறிப்பறிந்து அவருக்கு இன்பமூட்டுந் தகுதியுடையதாயிருந்தது. எனவே அவர் அதிலே முற்றும் ஈடுபட்டு அதில் பிறர் எவருங் காணாப் பரப்புகளைக் காணவும், பிறர் என்றுங் கருதாத ஆழத்தில் மூழ்கவும், பிறருக் கெட்டாத மூலைகளை எட்டியணுகவும் முடிந்ததில் வியப்பொன்றுமில்லை.
லாமின் மிகச் சிறந்த நூல் ‘ஈலியாவின் கட்டுரைகளே’ யாகும். இக்கட்டுரைகளை வாசிப்போருக்கு லாம் எழுதிய ஒரு கட்டுரையை நாம் படிக்கிறோம் என்ற நினைப்பைவிட லாமினுடன்கூட வாழ்க்கையின் அரண் மனைக்குள் கூடங் கூடமாக, அறையறையாகக் கடந்து சென்று திரையிட்டு மூடி மங்கிய ஒளியுடைய ஓர் உள்ளறைக்கு அவருடன் நண்பர் என்னும் உரிமையுடன் சென்று, ஒளிவு மறைவின்றி அவருடன் உரை யாடுகிறோம் என்ற நினைவே ஏற்படும். இக்கட்டுரைகளில் நாம் அவரது உள்ளத்தின் உட்கிடக்கை முழுமையும் தெளிவாக அறிகிறோம். அவர் கண்ட காட்சி, கேட்ட கேள்வி, அறிந்த அறிவு, உணர்ந்த உணர்ச்சி ஆகியவற்றை அவருடைய உள்ளத்தின் ஒரு பகுதி எப்படி அறியுமோ அப்படியே நாமும் அறிகிறோம்.
ஈலியா என்ற பெயர் இக்கட்டுரைகளை முதன் முதலில் லண்டன் திங்கள் வெளியீட்டில் (London Magazine) வெளியிடத் தொடங்கியபோது அவர் புனைந்துகொண்ட புனை பெயர் ஆகும். அஃது இன்முறுவல் பூத்த இயல்பினையுடைய அவருடைய வெளிநாட்டு நண்பர் ஒருவர் பெயரினின்று எடுத்தாளப்பட்டதென்று கூறப்படுகிறது.
நாட்கடந்த மனிதர்
மேரியுடன் குடித்தனம் பண்ணுவதும் வாணிபக் கழகத்தின் பேரேடுகள் ஏறிடுவதும் அவர் வாழ்க்கையுட்படிந்து அவரது நாள்முறை வழக்கமாய்ப் போய் விட்டன. முதன்முதலில் அவர் கழக எழுத்து வேலையை வெறுத்தவர் என்பதில் ஐயமில்லை. அதைப் பற்றி அவர் கூறும் வெறுப்புரைகள் பல. குடும்ப நிலையையும் உடன்பிறந்தார் நிலையையும் எண்ணிப் பாராவிடில் அதனை அவர் பொறுத்துக்கொண்டிருக்கவே மாட்டார் என்பது தெளிவு. ஆயினும் நாளடைவில் அஃது அவர்