ஆங்கிலப் புலவர் வரலாறு
இயற்கையோடொட்டி
173
வளர்ந்து விட்டது. அதுவும்
நன்மையாகவே அமைந்தது. அவரது ஓய்வுக்கு அஃது ஓர் உயிரையும் ஒரு பொருளையும் தந்தது. அவரது நாள்முறை நடையிலும் அஃது ஓர் ஒழுங்கை ஏற்படுத்திற்று. எனவே அவர் வெறுப்பதாகக் கூறிய அப்பணியிலிருந்து அவர் விலக நேர்ந்தபோது அஃது இன்பமாகப் படாமல் அவர் எதிர்பார்த்ததற்கு எதிராகத் துன்ப மாகவே பட்டது. அதுவரை மக்கள் வாழ்க்கையில் புகாது விலகியிருந்த அவருக்கு அவ்வளவு ஆண்டு சென்றதன் பின் வாழ்க்கையில் புதிதாய்ப் புக முடியவில்லை. எனவே பகலும் இரவும் விடாது வேலையின்றி வாளா இருப்பதால் அவருக்கு வாழ்க்கையில் வெறுப்பே ஏற்பட்டது. இதனை அவரே 'நாட்கடந்த மனிதர்' என்ற கட்டுரையில் விரித்துரைத்துள்ளார். அவர் இறக்கும்போது அவருக்கு ஆண்டு ஐம்பது. வாழ்க்கையின் வெறுப்பி னாலேயே அவர் இவ்வளவு விரைவில் இறக்க வேண்டி நேர்ந்தது.
லண்டன் வாழ்வு
தொழிலிலிருந்து விலகுவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சார்ல்ஸும் மேரியும் இஸ்லிங்டனிலுள்ள ஒரு குடிலுக்கு மாறினர். இது லண்டனிலிருந்தாலும் ஓரளவு நாட்டுப்புறத்தை ஒத்திருந்தது. நகர் நடுவிலேயே கிட்டத்தட்ட வாழ்நாள் முழுமையும் செலவு செய்த இவர் இப்போதுதான் முதன் முதலில் ஒரு தோட்டத்தை வீட்டினருகே பெற்றார். இவ்விடத்துக்கு அடிக்கடி அவருடைய நண்பர்கள் அவரைப் பார்க்க வருவார்கள். ஒரு தடவை நூல்களிடையிலேயே நாட்போக்கி வந்த நண்பராகிய ஜார்ஜ் டயர். (George Dyer) என்பவர் அவர் வீட்டை வந்து பார்த்து விட்டு அதன் அழகையே நினைத்துக்கொண்டு சென்றவர் தம்மை மறந்து புத்தாற்றில் இறங்கிவிட்டாராம். (ஆங்கில நாட்டு மக்கள் நம் நாட்டினரைப்போல் ஆற்று நீருள் முழுக முடியாது. நீரின் குளிர்ச்சி அங்கு அவ்வளவு மிகுதி. அதோடு அவர்கள் அங்ஙனம் மூழ்கியபின் உடையை உடன் மாற்றவேண்டும். நம் உடையைப்போல் அது தொங்கலானதும் ஒற்றையானதும் அன்று; ஆதலின் எளிதில் உடலில் பனிப்பு ஏற்படுத்தும் என்பதை ஓர்க.) இதனை அறிந்த மேரி உடன் அவரை இழுத்து வந்து உடை மாற்றிப் போர்வை கொண்டு