பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(174) ||.

அப்பாத்துரையம் - 45

போர்த்தினார். அப்படி இருந்தும் பனிக்காய்ச்சல் முற்றிவிட அவர் அவருக்குச் சாராயமும் நீருங் கலந்து புகட்டினார். அச்சமயம் சார்ல்ஸ் வீடு வந்து உடனிருந்து உதவி செய்தாராம்.

தொழில் விட்டபின் அவரது வாழ்க்கை முறை அவருக்குப் பிடிக்காததற்கு இன்னோர் அறிகுறி அவர் அடிக்கடி வீடு மாறியதாகும். இஸ்லிங்டனுக்கு வந்த சில நாட்களுக்குள் அவ்விடம் விட்டு அவர் என்ஃபீல்டில் சென்று குடிபுகுந்தார். இப்புது வீட்டுக்கு அவர் வருவதைப் பார்த்திருந்த நகைத்திறன் மிக்க ஒருவர் அதனை விரித்துரைத்துள்ளார். அதில் அவ் வீட்டைத் தாம் குடிக்கூலிக்கு எடுக்கப்போவதால் அவ்வீட்டில் 'இவ்வீடு குடிக்கூலிக்கு விடப்படும்' என்றெழுதித் தொங்கவிட்ட பலகையை அகற்றி, அவரது நாயின் வாயில் அதைக் கொடுத்துக்கொண்டு வந்தார் என்று கூறுகிறார். இவ்விடத்தில் இவர் மூன்றாண்டுகள் வாழ்ந்தார். 'ஈலியாவின் இறுதிக் கட்டுரைகள்' இங்கே வைத்துத்தான் எழுதப்பட்டன. இக்கட்டுரைகள் 1833இல் வெளியிடப்பட்டன.

சிலநாட் கழித்து அவர் மறுபடியும் லண்டனுக்கு வந்தார். அப்போது அவர் 'தெருக்கள் கடைகளெல்லாம் அப்படியே ருக்கின்றன. ஆனால், என்னுடைய நண்பர்களைத்தான் காணவில்லை' என்று கூறினார். அவருடைய நெருங்கிய நண்பர்களாகிய ஹாஸ்லிட்டும் கால்ரிட்ஜும் இதற்கிடையில் இறந்துவிட்டனர்.

இறுதி நாட்கள்

இறுதி நாட்களில் மேரியின் சீர்கேடு மிகுதியாய் விட்டது. அப்போது அவர்கள் வால்டன்ஸ் என்பார் வைத்திருந்த மருந்து விடுதிக்குச் சென்று தங்கினர். தாம் எங்கே இறந்து தங்கையைத் தவிக்கவிடுவோமோ என்ற அச்சம் அவருக்கிருந்தது. இருவரும் இதே நினைவை வெளியிட்டும் ஒருவருக்கொருவர் கூறுவதுண்டு. ஆனால், யார் முதலில் இறந்தாலும் அடுத்தவர் துயரப்படுவரே என்று இருவரும் கவலைப்படுவதும் உண்டு. இறுதியில் 1834இல் அவர் ஒரு நாள் சறுக்கி விழுந்து அதே காரணமாய் நலிவுற்று இறந்தார். அப்போது தங்கைகூட ஆறுதல் தரக் கொடுத்துவைக்க இல்லை. ஏனெனில், அவர் மனம் அப்போது சிதறிய நிலையில்