பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. பைரன்

கிரேக்க நாட்டுக்காக உயிர்துறந்த ஆங்கிலக் கவிஞர் பெருமான்

1. உள்ளக் குறை

ஜார்ஜ் கார்டன் பைரன் பெரிய ஆங்கில நாட்டுப் பண்ணைக் குடும்ப மொன்றில் கிளைக்குடியிற் பிறந்தவர். பிறக்கும்போது அவர் குடி எளிய நிலையிலேயே இருந்தது.

னால், பண்ணையின் நேர் உரிமையாளர் அனைவரும் இறந்தமையால் அவர் திடீரென்று பண்ணை உரிமையாள ரானார்.

பைரன் பிறந்தது 1788ஆம் ஆண்டு சனவரி 22ஆம் நாளில் ஆகும். அவருடைய தாய் கார்டன் குடும்பத்தில் பிறந்தவள். அவருடைய தந்தை ஜான் பைரன் ஆவர். ஜார்ஜ் கார்டன் பைரன் பிறந்த சில நாட்களுக்குள் அவர் தாய் தம் கணவரிடமிருந்து பிரிந்துவிட்டார். பிரிந்தும் சில நாட்கள் அவர்களிருவரும் அபர்டீனின் தெரு ஒன்றின் இரண்டு கோடிகளிலும் உள்ள இரண்டு வெவ்வேறு வீடுகளில் தங்கியிருந்தனர். அவ்விரு வீடுகளுக்கும் இடையே கொஞ்ச நாள் உருளை நாற்காலியில் வைத்துப் பைரன் அங்குமிங்கும் தள்ளிக்கொண்டு போகப்பட்டு வந்தார்.

அதன்பின் தந்தையார் தமது பங்காகக் கிடைத்த குடும்பச் செல்வமனைத்தையும் வீண் செலவு செய்து விட்டு 1791இல் இறந்து போனார். பின் 1793இல் பைரனுடைய ஒன்றுவிட்ட உடன்பிறந்தாரான ஜார்ஜ் ஆன்ஸன் பைரன் இறந்தார். இவர் இறந்ததனால் பைரனே பண்ணைக் குடும்பத்தின் உரிமையாளர் ஆயினர்.1798இல் ஐந்தாம் பைரன் பெரு மகனாரான வில்லியம் இறந்ததும் அவர் பண்ணைத் தலைமையேற்று ஆறாம் பைரன் பெருமகனார் ஆனார்.