பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




178

2. முதற்கோணல்

அப்பாத்துரையம் - 45

மேரி

பைரன் பள்ளியில் படிக்கும் நாட்களில் ஆன்சாபொர்த் என்ற அழகியை அவர் விரும்பிக் காதலித்தார். இவர் பெரும்பண்ணை ஒன்றின் உரிமை கொண்டவர். அவரது பண்ணையும் பைரனது பண்ணையும் ஒன்றையொன்று அடுத்துக்கிடந்தன. அவற்றின் எல்லைகளை ஒட்டி நெடுநாள் பைரன் குடும்பத்தாரும் அவர் குடும்பத்தாருடன் சண்டையிட்டுப் பகைமைபூண்டிருந்தனர். ஆண்டினை நோக்கப் பேரறிவு வாய்ந்த பைரன் அவரை மணந்துகொள்வதால் இரு குடும்பங்களும் பண்ணைகளும் ஒன்றாய் விடும் என்று நினைத்தார். ஆனால், மேரி ஆன் அவர் காதலைப் பொருட்படுத்தவில்லை. அதோடு மட்டுமன்றி, அவரை அடிக்கடித் தம் தோழியரிடம் அவமதிப்பாகப் பேசி அவரைப் புண் படுத்தினார். இறுதியில் அவர் மனது புண்படும்படி மிகவுங் கீழ்த்தரமான ஒருவனை அவர் மணந்து கொண்டார். பிற்காலத்தில் அவரது மணவாழ்வு கேடடைந்து பைரனைத் தாம் அவமதித்த குற்றத்திற்கு மிகவுந் தம்மை நொந்து கொண்டார். முதன்முதல் ஏற்பட்ட இக்காதல் முறிவு அவருக்கு என்றும் வருத்தத்தைத் தந்தது. நெடுநாட் பின்னர்க்கூடத் தாம் அவரையே பெண்மையின் சிறப்புக்கோர் இலக்காகக் கொண்டதாக அவர் கூறியதுண்டு.

3. பெருமையும் சிறுமையும்

இதன்பின் பைரன் கிரேக்க நாட்டிலும் துருக்கியிலும் அலைந்து திரிந்து பலவகைத் துணிகரச் செயல்களிலும் பண்புடைமக்கள் இயற்கைக்கு மாறான கூட்டுறவுகளிலும் ஈடுபட்டுப் பலவகை அலர் தூற்றல்களுக்கும் ஆளாயினர். பிறருடைய ஏளனமும் இகழுரையும் இவருக்கு மீண்டும் அதே நெறியில் செல்லும் வீறு கொடுத்ததே யன்றி அமைதி தரவில்லை.

இந்நிலையில் இரண்டாம்

முறை மணஞ்

செய்துகொள்வதே நல்ல தென நண்பர் சிலர் கூறினர். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு செல்வி மில்பாங்கு என்ற நடிகை மாதினிடம் பற்றுடையரானார். நண்பர் சிலர் இவ்வுறவு நல்லதன்றென்று வேறு வகையில் அவரைத் திருப்ப முயன்றும்,