பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

அது

179

நடைபெறாது மில்பாங்கையே அவர் விரும்பி அடையும்படி நேர்ந்தது.

ஊழ்வினைப் பயனால் செல்வி

1816இல் அவர்களுக்கு ஒரு பெண்மகவு பிறந்தது. அதற்குள்ளாக அவர்கள் உறவு முற்றிலும் முடிவடைந்தது.பைரன் பெருமாட்டி மண மறுப்புக்காக வழக்குத் தொடுத்தார். இதற்கு அவர் காட்டிய காரணமும் அதன் தெளிவுக்காகக் கொணர்ந்த சான்றும் புதுமை வாய்ந்தவை. அஃதாவது பைரன் மூளைக் கோளாறுடையவர் என்று அவர் குற்றஞ் சாட்டி அதற்குச் சான்றாக அவர் ஒருகால் தமது கைக்கடிகாரத்தை அடுப்பில் எறிந்து பின் தூளாக்கினர் என்று குறைகூறினார். எப்படியோ வழக்கு மன்றத்திலும் முழு ஆராய்ச்சியால் குற்றமுடையவரே என்று தெளிவாக்கப்பட்டு அவருக்கெதிரான தீர்ப்பு தரப்பட்டது.

பைரன்

இப் பேரவமதிப்பால் பைரன் மனம் முற்றிலும் முறிந்தது. ஆங்கில நாட்டு மக்கள் தமது துன்பத்தையே பெருங்குற்றமாகக் கொண்டு, தம்மை அவமதித்ததாக அவர் உணர்ந்தார். தாய்நாட்டிடம் இயற்கையாக இவருக்குப் பற்று இருந்த தெனினும் நாட்டு மக்களையும் அரசியலையும் இவர் தம் நூல்களுள் குறைகூறும்படி நேர்ந்தது பெரிதும் இதனாலேயே யாகும்.

இத்தகைய சிறுமைப்பட்ட வாழ்க்கையிலும் கூடப்பைரன் அறிவும், கவிப் புலமையும், விடுதலை உணர்ச்சியும், கலைத் திறனும் நன்கு விளங்குகின்றன. ஆங்கில மக்கள் அவரது பெருமையை உணர்வதற்கு அவருடைய வாழ்க்கைச் செய்திகளும் அவற்றை ஒட்டிய கோளுரைகளும் தடையா யிருந்தன. ஆனால், ஐரோப்பாவின் தலைநிலப்பகுதிகளில் எங்கும் பைரனது புகழும் அவரது கவிதையின் புகழும் மற்றெல்லா ஆங்கிலக் கவிஞரின் புகழினும் பன்மடங்காகப் பேரொளி வீசின.

4. கவிதையும் சுற்றுப்பயணமும்

கவிதையில் அவருக்கிருந்த ஆர்வம் பள்ளியிற் பயிலும் நாட்களிலேயே மிகுந்திருந்தது. கேம்பிரிட்ஜில் வைத்துக் கவிதைகளடங்கிய பல ஏடுகளை அவர் இயற்றினார். இவற்றுள்