பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலப் புலவர் வரலாறு

181

தமிழ்நாட்டுச் சீவக சிந்தாமணிக் கதையையும் நூலமைப்பில் விக்கிரமாதித்தன் கதையையும் இது நினைப்பூட்டவல்லது.

ஹெரால்டு வீரன்" என்ற நூலின் பிற்பகுதி அஃதாவது பின் இரு பிரிவுகள், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் இயற்கைக்காட்சிகள், பிரான்சு நாட்டின் பெருவீரரான நெப்போலியன் போர்ப்பெருமைகள் முதலியவற்றின் விரிவுரைகள் செறிந்தவை. இதனை இன்றும் புலவரும் மாணவரும் உச்சிமேற் கொள்கின்றனர். கடல், மலை முதலிய இயற்கையின் அருந்திறக்காட்சிகளும் விடுதலை உணர்ச்சி ததும்பும் பாடல்களும் இதில் மிகுதி.

5. விடுதலை யார்வமும், கிரேக்க நாட்டுப் போர்களும்

விடுதலை உணர்ச்சியும் வீரமும் உயர் நாகரிகமும் மிக்க பழைய நாடுகளிடம், சிறப்பாகப் பழம்பெருஞ் சிறப்புவாய்ந்த கிரேக்க நாட்டிடம் அவருக்கிருந்த பற்றும் ஆர்வமும் சொல்லுந்தரமன்று. அந்நாள் அந்நாடு துருக்கிநாட்டவரது ஆட்சிக்குட்பட்டிருந்தது. அதன் விடுதலைக்காக அவர் அடிக்கடி பாடுபட்டு இயக்கங்களும் சிறு போர்களும் நிகழ்த்தினர். அந் நாட்டு மக்களிடை, சிறப்பாக இளைஞரிடை அவர் மிகுந்த செல்வாக்குடைய தலைவராக விளங்கினர். ஆயினும் இத்துறையில் அவர் வெற்றி காணவில்லை. இத்துறையில் இவருடைய ஆர்வமும் பெருமையும் நன்கு நினைத்தின்புறத் தக்கவை.

46

நாட்செல்லச்செல்ல, பைரனது உடல் குடியாலும் மிகுதி உழைப் பாலும் கெட்டுப் பருமனடையத் தொடங்கிற்று. இறுதியில் 1824இல் முஸலாங்கியில் வைத்துக் காய்ச்சலால் அவர் இறந்தார். காய்ச்சல் கண்டவுடன் அந்நாட்டைவிட்டு அகலும்படி மருத்துவர்கள் கூறியும், எனது கிரேக்க நாட்டிற்கு உழைக்கும் வாய்ப்பு உள்ளளவும் நான் என் உயிரை ஒரு பொருட்டா யெண்ணி அப்புறம் செல்லேன்,” என்று அவர் பிடிவாதமா யிருந்துவிட்டார். மனைவி, மக்கள் ஆகியவர்கள் பெயர் சொல்லிக் கொண்டே அவர் உயிர் நீத்தாராம்.

பைரன் பெருமகனாரது தனி வாழ்வில் தோல்வியும் சிறுமையும் காண்கிறோம். அவர் பொது வாழ்விலோ,